சென்னை, மே 28- தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக சோ ஐயர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.ஆளுநரின் உத்தரவின் பேரில் அவர் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தலைமைச் செயலர் தேபேந்திரநாத் சாரங்கி தெரிவித்துள்ளார்.
2011, மே 27-ம் தேதி முதல் இரு ஆண்டுகள் அவர் இப்பதவியில் இருப்பார். இவர் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.இதுவரை தேர்தல் ஆணையராக இருந்த சையத் முனீர் ஹோடா தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். அவரது ராஜிநாமாவை ஆளுநர் ஏற்றுக்கொண்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக