அப்படி என்றால் த்ரப்போது புழக்கத்தில் உள்ள ஒசமன் பின் லேடன் மரணித்த பொது எடுக்கப்பட்ட படம் எப்படி வந்தது?
இதற்கான பதில் ‘போட்டோ ஷாப்’ என்பதே.
இந்த ஒசாமா வின் புதிய படம், 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் 29ம் திகதி மத்திய கிழக்கு நாட்டைச் சேர்ந்த இணையத்தள பத்திரிகையில் பிரசுரமான படத்தைக் மற்றொரு கொல்லப்பட்டவரின் படத்தோடு ‘போட்டோ ஷாப்’ செய்து உருவாக்கப்பட்டுள்ளது. இதற்க்கான தெளிவான பட ஆதாரங்கள் ‘யுனிட்டி மீடியா நியூஸ்’ கையில் கிடைத்தால், கிழே அதை வெளியுட்டுள்ளோம்.
மற்றொரு கொல்லப்பட்டவரின் படத்தோடு ‘போட்டோ ஷாப்’!!!
இந்த பட ஆதாரங்களை ஆராய்ந்து வெளியிட்டவரும் சாதாரனாமானவர் இல்லை. அவர் AFP புகைப்படங்களுக்கான தலைமை ஆசிரியரும் ரஷ்ய நாட்டை சேர்ந்த புகைப்பட வல்லுனருமான மெலடன் அன்டனோவ் ஆகும்.பின்லேடன் கொல்லப்பட்டமை தொடர்பாக அமெரிக்கா வெளியிட்ட தகவல்கள் கூட மிகவும் தெளிவில்லாமல், ஆதாரங்கள் எதுவும் இல்லாமல், ஒன்றுக்கொன்று முரணாக உள்ளது.
முதலில் அமெரிக்க வெள்ளை மாளிகை அறிக்கையில் , ஒசாமா பின்லேடனின் மறைவிடத்தில் அமெரிக்க இராணுவத்தின் படையினர் தாக்குதல் நடத்தி பின்லேடனை கைது செய்யும்படி ‘ஒபாமா’ உத்தரவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. பராக் ஒபாமாவே தனது வெள்ளை மளிகை பேச்சில் இந்த தகவலையும் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. .
எனினும் ஒசாமாவை பிடிப்பதற்கு நடந்த சண்டை பற்றி விவரித்த அமெரிக்க தரப்பு, ஒசாமா மற்றும் அவரது பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தியமையால் பின்லேடனைக் கொல்ல நேர்ந்ததாக அறிவித்தனர். அத்துடன் கொல்லப்பட்ட பின்னர் அவரது உடல் கைப்பற்றப்பட்டதாகவும் அறிவித்திருந்தனர்.
எல்லாவற்றிற்கும் மேலாக கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பாட்ட ஒசாமாவின் உடலை இதுவரை வெளியுலகிற்கு காட்டாததும் சந்தேகங்களை உறுதிப்படுத்துவதாகவே உள்ளது. பின்லேடனின் உடலை இஸ்லாமிய சம்பிரதாயப்படி சடங்குகள் நடத்தப்பட்டு கடலில் வீசப்பட்டதாக அறிவித்தனர். உடலைக் கைப்பற்றி அமெரிக்க உடனடியாக கடலில் வீசியமை பலவித சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
இறந்ததாக காட்டப்பட்டுள்ள பின்லேடனின் படத்தில் மோசடிகள் இடம்பெற்றுள்ளமையும் சந்தேகத்தை மேலும் வலுப்பெறச் செய்துள்ளது. இரத்தக் கறையுடன் அரைக் கண் திறந்து காணப்படும் அவரது புகைப்படம் போலி என்றும் இரண்டாண்டுகளுக்கு முன்பே பல இணையதளங்களிலும் வெளியாகி இருந்ததாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1998ம் ஆண்டு எடுக்கப்பட்ட பின்லேடன் புகைப்படத்துடன் அதே மாதிரியான ஒருவரின் புகைப்படம் இணைத்து உருவாக்கப்பட்ட புகைப்படம் தான் இன்று பல பத்திரிகைகளிலும், இணையத்தளத்திலும் செய்தி வெளிவந்துள்ளது.
அரசியல் நோக்கர்களின் கருத்துப்படி, ‘அல்கொய்தா’ – ‘ஒசாமா பின் லேடன்’ எல்லாமே அமெரிக்காவின் உலகளாவிய ஆதிக்கத்தை நிலைநாட்ட செய்யும் நாடகமோ என்று ஆயயப்பட வேண்டியுள்ளது.
ஏனெனில் ‘ஆப்கானிஸ்தானில்’ இனி அமெரிக்க படைகளின் இருப்பால் அமெரிக்காவிற்கு கடும் பின்னடைவும் நஷ்டமும் ஏற்படும் என்ற சூழலில், அமெரிக்க படைகள் வாபஸ் வாங்கப்படும் என்ற நிலையில் இந்த ‘ஒசாமா கொல்லப்பட்ட’ செய்தி எவ்வித நேரடியான ஆதாரங்களுமில்லாமல் பரப்பப்பட்டுள்ளது, சந்தேகங்களை உருதிபடுத்துகின்றது.
இதற்க்கு முன்னாள் உள்ள அமெரிக்க அதிபர்கள், அமெரிக்க படையினர், உளவுத்துறைனர், நேட்டோ இவர்களின் மற்ற ஐரோப்பிய பங்காளிகள் யாவரும் தங்களது அரசியல், ராணுவ, படைபல மற்றும் பொருளாதார நிலைகளுக்கு பங்கம் வரும்போதெல்லாம் ‘ஒசாமா பின் லேடன்’ மிரட்டியதாக ஒரு செய்தியை பின் லேடனின் தோற்றம் மாறாத படத்தை வெளியிட்டு, தங்களுக்கு சாதகமாக மக்கள் கருத்தையும் அரசுகளின் கருத்தையும் திருப்பி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எனவே ‘அல்கைதா’ என்ற அமைப்பே அமெரிக்காவின் மறைமுக தூண்டுதலின் பேரில் உருவாக்கி நடத்தப்பட்டுள்ளது என்ற சந்தேகங்கள் வழுத்துள்ளது. பின் லேடன் பல ஆண்டுகளுக்கு முன்னரே கொல்லப்பட்டு, அந்த இடத்தில வேறு ஒருவரை ‘அமெரிக்கா’ புகுத்தி பிராந்திய ஆதிக்கத்தை தக்க வைத்துக்கொள்ள முயன்று, இப்போது அது தேவைப்படாத நிலையில் உலகின் ‘பார்வைக்கு’ மறைவாக அந்த கதையை முடித்திருக்கலாம், மேலும் பொம்மைகளை வைத்து அடுத்த ஆட்டத்தை தொடங்கலாம், என்று ஊஹிக்க இடமிருக்கிறது.
இதற்கு மற்றுமொரு உதாரணமாக ‘விக்கி லீக்ஸ்’ நடத்தும் ‘அச்சஞ்சே’ வை மறைமுகமாக தூண்டி விட்டு உலக நாடுகளின் அரசுகளை அவர்களது ‘ராஜதந்திர’ செய்தி பரிமாற்றத்தை வெளிப்படுத்தி ‘மிரட்டி’ பண்டியவைக்கும் அமெரிக்காவின் தந்திரமும் ஒரு உதாரணம்.
குறிப்பாக, அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செயலர் ஹில்லாரி கிளிண்டன், ‘ஜூலியன் அசாஞ்சே’ விக்கி லீக்ஸ்க்கு எதோ கட்டியம் கூறுவது போல செய்தி வெளியிட்டது இதற்கு வழுவான ஆதாரமாக பார்க்கபடுகிறது.
அமெரிக்காவின் நாடகங்களுக்கு எல்லையுண்டா…?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக