ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

சீனாவில் இருந்து சிங்கப்பூருக்கு 10 மணி நேரத்தில் ரயில் பயணம்!

சீனா வுக்கும், சிங்கப்பூருக்கும் இடையிலான அதி விரைவு ரயில் போக்கு வரத்துக்கான முதற்கட் டப் பணிகள் துவங்கி யுள்ளன.

தெற்காசிய நாடு களை ரயில் போக்குவ ரத்து மூலம் இணைக் கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, சீனாவும் சிங்கப்பூரும் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண் டன. இந்த ஒப்பந்தப் படி, சீனாவின் யுனான் மாகாணத்தையும் சிங் கப்பூரையும் இணைக் கும் ரயில் போக்குவரத் துக்கான பணிகள் துவக் கப்பட்டுள்ளன. வரும் 2020இல், இந்த ரயில்பாதை பணிகள் முடிந்து, ரயில் போக்கு வரத்து துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், சீனாவி லிருந்து, 10 மணி நேரத் தில், சிங்கப்பூரை சென்ற டைய முடியும். இந்த ரயில் பாதை பணி முடிந் ததும், அடுத்த கட்ட மாக, தாய்லாந்து தலை நகர் பாங்காக்கையும், மலேசியாவின் கோலா லம்பூர் நகரையும் இணைக் கும் ரயில் பாதை பணி ஆரம்பமாக உள்ளது. இந்த பணி நிறைவு பெற் றதும், வியட்நாமுக்கும் கம்போடியாவுக்கும் இடையே ரயில்பாதை போடப்பட உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக