லிபியா தலைநகர் திரிபோலியில் கர்னல் கடாபியின் வீடு உள்ளது. இந்த வீட்டுக்கு அருகே நேட்டோ படைகள் குண்டுகள் விசின.இந்த தாக்கதலின் போது கடாபி வீட்டுக்கு அருகே கடுமையாக புகை மண்டலம் ஏற்பட்டது. நேட்டோ படைகள் தற்போது திரிபோலியில் வான் வழித்தாக்குதலை துவங்கியுள்ளன. சில தாக்குதல்கள் கடாபி தங்கியுள்ள பாப் அல் அசிசியா வளாகம் அருகே நடத்தப்பட்டன.
பிரான்சும், பிரிட்டனும் வான்வழித்தாக்குதலை தீவிரப்படுத்த அதிரடி ஹெலிகொப்டர்களை பயன்படுத்துவதாக அறிவித்தவுடன் நெட்டோ படைகள் திரிபோலியில் தாக்தலை அதிகரித்துள்ளன. நேட்டோ படைகள் வீசிய பயங்கர வெடிகுண்டுகளால் கட்டிடங்கள் அதிர்ந்தன என்று ஹோட்டலில் தங்கி இருந்த பத்திரிகையாளர்கள் தெரிவித்தனர்.
நேட்டோ படை தாக்குதலில் 3 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாகவும் 150 பேர் காயம் அடைந்ததாகவும் லிபியா அரசு செய்தித்தொடர்பாளர் முசா இப்ராகிம் தெரிவித்தார். பிரான்ஸ் நாளிதழான லே பிரே வெளியிட்ட செய்தியில் மே 17 ம் திகதி பிரான்ஸ் கப்பல், டோனரே மூலம் 12 ஹெலிகொப்டர்கள் கொண்டு செல்லப்பட்டதாக தெரவித்துள்ளது.
லிபியாவின் கிழக்கு பகுதி போராட்டக்கார்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. நாட்டின் மேற்கு பகுதி லிபியா ராணுவ வசம் உள்ளது.. லிபியாவுக்கு பிரிட்டன் றொயல் கடற்படையின் மிகப்பெரும் போர்கப்பலான எச்எம்எஸ் மூலம் அதிரடி ஹெலிகொப்டர்கள் அனுப்பப்படுகின்றன. |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக