அல்பெர்டாவில் உள்ள ஸ்லேவ் லேக் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் 450 கட்டிடங்கள் எரிந்து நாசமாயின. கடுமையான காற்று காரணமாக தீயைக் கட்டுப்படுத்த முடியவில்லை.நகரில் மூன்றில் ஒரு பகுதி கட்டிடங்கள் தீயில் சேதம் அடைந்தன. தீ கடுமையாக பரவியதை தொடர்ந்து வார இறுதியில் 7 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
தங்கள் சொந்த பொருட்களை எடுப்பதற்கும் அங்குள்ளவர்களுக்கு அனுமதி தரப்படவில்லை. தீ வேகம் மோசமாக இருந்ததால் உயிரிழப்பு ஏற்படும் என்பதால் யாரும் குறிப்பிட்ட பகுதிகளில் அனுமதிக்கப்படவில்லை. தீ விபத்து நடந்த வீடுகளில் சமையல் எரிவாயு கசிவு உள்ளதா என்றும், இதர அபாய பொருட்கள் உள்ளதா என்றும் ஆய்வு செய்யப்பட்டது.
தீ விபத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய தங்குமிடம் இல்லாத பட்சத்தில் உதவி அளிப்பதாக அல்பெர்டா அரச நிர்வாகம் தெரிவித்து உள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு செலவின நிதியையும் ஓகஸ்ட் மாதம் இறுதி வரை அளிப்பதாக அரசு தெரிவித்துள்ளது.
இதன் படி பெரியவர்களுக்கு தலா 1250 டொலரும், சிறியவர்களுக்கு 500 டொலரும் அளிக்கப்படுகிறது. தீ பகுதியில் இருந்து வெளியேறிய மக்கள் தங்களது கடனட்டை மூலம் நிதி உதவியை பெறுகிறார்கள். சனிக்கிழமை மக்கள் பல்வேறு அவசர நிலை முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர்.
எட்மாண்டன் கிராண்ட் மாக் எவான் பல்கலைகழகம் மாணவர் குடியிருப்பை தீயில் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒதுக்கி உள்ளது. ஸ்லேவ் லேக் பகுதியில் பல வீடுகள் எரிந்து தரைமட்டமானதால் அவர்களது நிலைமை கேள்விக் குறியாக உள்ளது. காட்டுத் தீ குறித்து வெளியே உரிய எச்சரிக்கை இல்லை என பாதிக்கப்பட்டவர்கள் கூறினர். |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக