ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

ரஜினி ? விட்டுக்கு விடு வாசப்படி


ரஜினிக்கு தரப்பட்டு வரும் சிகிச்சைகள்  பற்றிய தகவல்கள் உடனுக்குடன் மருத்துவமனையில் இருந்து வெளியாகி விடுவதால் மீடியாவில் ஒவ்வொருவரும் ஒவ்வோரு விதமாக செய்தி வெளியிட்டு வருவதில் ரஜினிக்கு இப்போது உறவுகளீடமிருந்து நெருக்குதல் ஏற்பட்டிருகிறது என்கிறார்கள் ரஜினியின் தலைமை மன்ற வட்டாரத்தில்.

நேற்று முழுவதும் ராமச்சந்திரா மருத்துவமனையில் தனுஷும், சௌந்தர்யாவின் கணவர் அஸ்வினும் ரஜினியால் அழைக்கப்பட்டு ரஜினியே அவர்களிடம் சொத்துக்கள் குறித்து விவாதித்தாகவும், அதற்கெல்லாம் இப்போது அவசியமில்லை மாமா என்று இருவரும் சொத்து பத்தி பேசவேண்டாம். மீடியாவுக்கு நாமே தீனி போட்டமாதிரி ஆகிவிடும். நீங்கள் பதட்டபடவேண்டாம் என்று சொல்லிவிட்டார்களாம்.


ஆனால் ரஜினியின் மகள்கள் சொத்து பிரிவினை பற்றி சௌந்தர்யாவின் கல்யாண தருணத்திலேயே பேச ஆரம்பித்ததால்தான் ரஜினிக்கு மன பிரச்சனையும், உடல் பிரச்சனையும் ஏற்பட்டது என்கிறார்கள். மேலும் சுல்தான் தி வரியார் அணிமேஷன் படத்துக்கு ரிலையன்ஸ் பிக் பிக்ஸர்ஸ் நிறுவனம் சௌந்தர்யாவுக்கு 55 கோடியை கொடுத்ததாகவும், அந்தத்தொகையை சென்னை தி நகரில் முக்கிய ரியல் எஸ்டேட் பிராப்பர்ட்டியை வாங்க பயன்படுத்தி விட்டதால் சிக்கல் எழுந்ததது என்றும், அந்தக் கடனை அடைக்கவே ரஜினி ராணாவைத் தொடங்கியிருகிறார் என்கிறார்கள்.
பிரச்சனை வரக்கூடாது என்பதற்காக ராணா பிராஜெக்டில் ஐஸ்வர்யாவையும் ஒரு பங்குதாரராக ரஜினி சேர்ந்ததில் சௌந்தர்யாவுக்கு விருபமில்லாத நிலையில்தான் பிரச்சனை தொடங்கியது. ரஜினியின் உடல்நிலை பாதித்ததற்கு உறவுகளால் அவருக்கு ஏற்பட்ட நெருக்கடிதான் காரணம் என்கிறார்கள் நெருக்கமான மன்ற வட்டரத்தில் இதற்கிடையில் ரஜினி மருத்துவமனையில் இருந்து பதட்டமடைய வேண்டாம் என்று சொல்லும் விடியோ கிளிப் நாளை செய்திச்செனல்களுக்கு தரப்பட இருகிறதாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக