அவைத்தலைவரை பொலீசார் கைது செய்துள்ளனர். மதுரையில் நடைபெற்ற இந்த சம்பவம் பற்றிய தகவல் வருமாறு:-
மதுரை விமான நிலையம் அமைந்துள்ள அவனியாபுரம் பகுதியை சேர்ந்த நாகசுந்தரம் என்பவர் அந்த பகுதியின் தே.மு.தி.க கட்சியின் அவைத்தலைவராக இருந்து வருகிறார். இவர் இன்று அந்த பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு தேவையான சமையல் சாமான்கள், அரிசி, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை வழங்கும் அரசின் நியாய விலைக் கடைக்கு வந்தார். பிறகு அங்கிருந்த ஊழியர்களிடம் " நாங்கள் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளோம். அதை கொண்டாட வேண்டும். அதற்கு 5,000 பணம் வேண்டும் " என்று கேட்டுள்ளார்.
இதனை அடுத்த அங்கிருந்த ஊழியர்கள் நாகசுந்தரம் தங்களிடம் பணம் கேட்டு மிரட்டுவது பற்றி பொலீசாரிடம் புகார் தெரிவித்தனர். இதனை அடுத்து அங்கு வந்த இன்ஸ்பெக்டர்
கஜேந்திரன் தலைமையிலான பொலீசார் நாகசுந்தரத்தை கைது செய்து வழக்கு பதிவு செய்தனர். இந்த தகவலை உடனடியாக விஜயகாந்தின் கவனத்திற்கு கொண்டு செல்வோம் என்று அங்கிருந்த மக்கள் பேசிக் கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக