ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

நேட்டோ தாக்குதலுக்கிடையேயும் தொலைக்காட்சியில் தோன்றிய லிபிய அதிபர்!

கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதிமுதல் நேட்டோ படையினர் லிபிய அதிபர் கடாபியைக் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த வாரம் கடாபியின் மகன் மற்றும் பேரன்கள் நேட்டோ படையினரில் கொடுந்தாக்குதல்களில் உயிரிழந்தனர். அப்போது அங்கிருந்த அதிபர் கடாபி நூலிழையில் உயிர்தப்பியதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கிட்டத்தட்ட 13 நாட்களுக்குப் பிறகு லிபிய தொலைக்காட்சியில் அதிபர் கடாபி தோன்றியுள்ளார். சர்வதேச செய்தியாளர்கள் முன்னிலையில் லிபிய பழங்குடியின தலைவர்களுடன் அதிபர் கடாபி ஆலோசனை நடத்துவதாகக் காட்டப்பட்டது.

பல்வேறு நாடுகளின் கண்டனத்தையும் மீறி குடிமக்களைக் காப்பதாகச் சொல்லிக்கொண்டு நேட்டோ படைகள் லிபிய அதிபரைக் குறிவைத்து தாக்குதல் நடத்திவரும் சூழலில் லிபிய அதிபர் தொலைக்காட்சியில் தோன்றியதன் மூலம், நேட்டோ தாக்குதல்களில் அவர் உயிர்ழந்திருக்கக்கூடும் என்ற வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக