ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

உலக மகா யோக்கியர் போல பேசும் அமெரிக்க சமுதாயம், உண்மையிலேயே நாகரிக சமுதாயமா ?

மக்களாட்சி, மனித உரிமை, தனி மனித சுதந்திரம்என்றெல்லாம் வாய் கிழிய பேசும் அமேரிக்கா உண்மையிலே அப்படி நடந்து கொள்கிறதா? இன்றைய தினம் உலக மக்களுக்கு அபாயத்தை கொடுக்க கூடிய காரணிகளில் முக்கியமானது மத வெறியினால் உருவாகும் பயங்கர வாதமும், உலக முழவதையும் தானே சுரண்டிப் பிழைக்க , எத்திப் பிழைக்க நினைக்கும் ஏகாதிபத்தியமுமே.

தனக்கு எது ஆதாயம் என்பதைத் தான் அமேரிக்கா முதலில் பார்க்கிறது, முதலில் மட்டுமல்ல  கடைசி வரையிலும் அது தன் சுய நலத்தை  மட்டுமே சிந்திக்கிறது என்பதை பள்ளி சிறுவர்கள் கூட அறிந்து கொண்டு உள்ளனர். உலகில் எங்கெல்லாம் கனிம வளம் உள்ளதோ அங்கெல்லாம் நட்பு நாடாக காட்டிக் கொண்டு பாதுகாப்பாக தருவதாக சொல்லி மிகப் பெரிய குண்டுகளை மக்களின் தலையிலே இறக்குகிறது.
வியட்நாம் முதல் லிபியா வரை அமேரிக்கா அப்பாவி மக்களின் தலையின் இறக்கிய குண்டுகளையும் அதனால் இறந்தவர்களின் எண்ணிக்கையை , ஓடிய இரத்த ஆற்றை எண்ணினால் நெஞ்சம் தாங்காது.  இப்போது இஸ்லாமிய மத வெறி , பயங்கர வாதம் என்று எல்லாம் கர்ஜிக்கும் பேச்சுக்களை தரும் அமெரிக்க, உண்மையிலே தன பங்குக்கு மத வெறியை குறைக்க முயற்சி செய்து இருக்கிறதா?
அழகிய  உடை அணிந்த இளம் அமெரிக்க பெண்கள் சன்  கிளாஸ் போட்டுக் கொண்டு, இந்தியாவின் பட்டி தொட்டி எங்கும் சென்று அங்கே இருக்கும் சிறுவர்களை கட்டித் தழுவிக் கொண்டு விளையாடி அவர்களுக்கு ஜீன்ஸ் , டி சர்ட் தருகிறார்கள்.
அட இது என்ன தவறா ஐயா, என்றால் இது தவறு இல்லை, அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ் … அன்பு காட்டுங்கள் . வரவேற்கிறோம்,
ஆனால் அன்பு காட்டுவதாக் சொல்லி அப்படியே அவர்களை மத வெறி விடத்தில்  மூழ்க வைத்து பாவ ஸ்நானம் செய்ய வைக்கிறார்கள். இந்த அமெரிக்க யுவதிகளை  சந்திக்கும் முன் இந்திய அப்பாவி குடிசை வாசிகள் எந்த மதத்தையும் வெறுக்காத நாகரிக அன்பு நெஞ்சங்களாக வாழ்ந்தன. இவரக்ள அவர்களை மாற்றி , அவர்களின் மத சகிப்புத்தன்மையை அழித்து வெறுப்பு கருத்துக்கள் உள்ளவர்கள் ஆக்குகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக