மும்பை:மஹராஷ்ட்ரா மாநிலம் மும்பையில் பாப்ரி மஸ்ஜித் இடிப்பிற்கு பிறகு ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் நடத்திய முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். இக்கலவரத்தில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுடன் இணைந்து போலீசாரும் முஸ்லிம்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி கொலை செய்தனர்
.இக்கலவரம் நடைபெறும் வேளையில் சுலைமான் பேக்கரி அருகே 9 முஸ்லிம்கள் மும்பை போலீஸ் கமிஷனர் ஆர்.டி.தியாகி தலைமையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டனர்.ஆனால், இக்குற்றத்தை அவ்வேளையில் உயிருக்கு பயந்து பள்ளிவாசலில் அடைக்கலம் புகுந்த 76 அப்பாவி முஸ்லிம்கள் மீது சுமத்தி வழக்குப்பதிவுச்செய்தது போலீஸ்.
மும்பை கலவரம் தொடர்பாக விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் தனது நடுநிலையான அறிக்கையை பின்னர் தாக்கல் செய்தது. அதில், சிவசேனாவின் பால்தாக்கரே, முமபை போலீஸ் கமிஷர் ஆர்.டி.தியாகி உள்ளிட்டோர் குற்றவாளிகள் என கூறியிருந்தார். இதனை தொடர்ந்து மும்பைக் கலவரம் தொடர்பாக புலனாய்வு செய்ய நியமிக்கப்பட்டது ஸ்பெஷல் டாஸ்க் ஃபோர்ஸ்(S.T.F).
சுலைமான் பேக்கரி வழக்கில் உண்மையான குற்றவாளி போலீஸ் கமிஷனர் ஆ.டி.தியாகிதான் என்பதை STF கண்டுபிடித்தது. STF தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், போலீஸ் கமிஷனர் ஆர்.டி.தியாகி தேவையில்லாமல் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் முஹம்மது அலி சாலையிலுள்ள சுலைமான் பேக்கறி அருகே 9 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்’ என கூறியிருந்தது. இவ்வழக்கில் பொய்யாக வழக்கு ஜோடிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு கடந்த மே மாதம் 4-ஆம் தேதி மும்பை உயர்நீதிமன்றம் குற்றமற்றவர்கள் என தீர்ப்பளித்துள்ளது.
இவ்வழக்கு குறித்து கருத்து தெரிவித்த வழக்கறிஞர் ஸகீர் கான் கூறுகையில், ‘மும்பை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஸவ்ந்தர் பல்டோடா அஷ்பாக் அஹ்மத், நூருல் ஹுதா ஆகியோரை குற்றமற்றவர்கள் என விடுதலைச்செய்துள்ளது. இவர்கள் ஜாமீனில் வெளியே இருந்தாலும் கடந்த 18 ஆண்டுகளாக மனோரீதியாக பாதிப்பிற்குள்ளானார்கள். கீழ் நீதிமன்றம் போலீசுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தாலும், உயர்நீதிமன்றம் எங்களது கோரிக்கையை ஏற்று அவர்களை குற்றமற்றவர்கள் என விடுதலை செய்துள்ளது.’ என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக