ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

துபாயில் நபிகளாரை அவமதித்த முதன்மை ஆசிரியருக்கு கல்தா


gems-educationதுபாய்:முஹம்மது நபி(ஸல்..) அவர்களை அவமதித்த பள்ளிக்கூட முதல்வரை நிர்வாகம் பணியிலிருந்து நீக்கியுள்ளது. கேரள மாநிலத்தைச் சார்ந்த கிறிஸ்தவரான ஸன்னி வர்க்கி என்பவருக்கு சொந்தமான ஜெம்ஸ் பள்ளிக்கூட நிர்வாகம் முதன்மை ஆசிரியர் மீது நடவடிக்கை மேற்கொண்டது.

பள்ளிக்கூடத்தில் இஸ்லாமிய நடைமுறைகளை பாடம் எடுக்கும் ஆசிரியருக்கான நேர்முகத்தேர்வுக் குழு முன்பாக இந்தியாவை சார்ந்த பள்ளிக்கூட முதன்மை ஆசிரியர் காழ்ப்புணர்வுடன் முஸ்லிம்கள் உயிரினும் மேலாக மதிக்கும் நபிகளாரை அவமதித்துள்ளார்.
கடந்த வாரம் இதர ஆசிரியர்களின் முன்பாக நேர்முகத்தேர்வில் கலந்துக்கொள்ள வந்த நபரிடம் தேவையற்ற கேள்வியை கேட்ட முதன்மை ஆசிரியரை அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கிவிட்டதாக ஜெம்ஸ் பள்ளிக்கூட நிர்வாகம் அறிவித்துள்ளது.
முதன்மை ஆசிரியர் நபிகளாரை அவமதித்த செயலை துபாய் பள்ளிக்கூட ஆணைய அதிகாரிகள் விசாரணை நடத்திவரும் வேளையில் நிர்வாகம் இவரை உடனடியாக வெளியேற்றியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக