ஆஸ்திரேலியாவில் இனவெறி சமீபத்திய சர்ச்சையாக இருந்து வந்தது. இது தணிந்திருக்கும் இந்நேரத்தில் இந்துக்ககடவுள் அவமதிப்பு சம்பவம் உலகம் முழுவதும் கடும் கண்டனத்தை ஏற்படுத்தியது.
சிட்னியில் கடந்த 2 ம் தேதி முதல் 6 ம்தேதிவரை ரோஸ்மவுன்ட் ஆஸ்திரேலியன் பேஷன்வீக் கொண்டாடப்பட்டது.
இதில் ஒரு அழகி நீச்சல் உடையில் வந்தார். கவர்ச்சிகள் தெரியும் விதமான இந்த உடை அணிந்த பெண்ணின் முன்னும், பின்னும் லஷ்மி கடவுள் பொறிக்கப்பட்டிருந்தது.
இது இந்து மக்களின் கண்டத்திற்குள்ளாகியிருக்கிறது. உலகம் முழுவதும் உள்ள இந்து அமைப்பினர், சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.
ஐதராபாத்தில் பாஜகவினர் இந்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆஸ்திரேலியா நாட்டு கொடியும், ஆடை வடிவமைப்பாளர் லிசாவின் உருவ பொம்மையும் தீ வைத்து கொளுத்தினர்.
உலகம் முழுவதிலும் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியதால், இந்து கடவுளான லட்சுமி தேவியின் படத்தை பிகினி உடையில் அச்சிட்டு வெளியிட்ட லிசா புளு ஸ்விம்வேர் நிறுவனம் மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
அதோடு, இந்து கடவுள் படம் அச்சிட்ட பிகினி உடைகள் இனி மார்க்கெட்டில் கிடைக்காது. ஏற்கனவே மார்க்கெட்டுக்கு வந்த பிகினி உடைகளையும் திரும்ப பெற்று விட்டோம் என்றும் அந்த கம்பெனி அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக