ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

அடுத்த முதல்வர் யார்?


யாராக வேண்டுமானாலும் இருந்து போகட்டும்...திமுக அல்லது அதிமுக ஆட்சி அமைக்கும் அல்லது கூட்டனி ஆட்சி அமைய வாய்ப்பு இருக்கும் அவ்வளவுதானே?

சார்பு நிலையாக பேச ஆரம்பித்தால்  வண்டி வண்டியாக பேசலாம்.. அரசியல் சாக்டையில் யாரும் யோக்கியம் இல்லை என்பதுதான் உண்மை...


அதனால்தான் முன்னாள் கர்நாடகா முதல்வர்... காந்தியே இருந்தாலும் ஊழல் செய்து இருப்பார் என்று ஒரு ஸ்டேட்மென்ட் விடுத்து இருக்கின்றார்..

நான் இணையத்தில் எந்த கட்சிக்காவும் உயிரை கொடுத்து சண்டை போடும் ரகம் நான் அல்ல...அதனால் ஒரு பயனும் இல்லை... என்பது எனக்கு தெரியும்...

எனக்கு என் பார்வையில் யார் ஒரளவுக்கு சரியாக இருக்கின்றார்கள்? நன்றாக கவனியுங்கள்.. ஒரளவுக்கு சரியாக இருக்கின்றார்களோ? அவர்களை நான் ஆதரிக்கின்றேன்...அப்படி நான் ஆதரிப்பவர்களை கண் மூடி தனமாக ஆதரிப்பவனும் அல்ல...


அவர்கள் தப்பு செய்தாலும் தப்புதான்... ஆனால் இணையத்தில் எழுதுபவர்கள் மற்றும்  படித்தவர்களை தாண்டி இன்னும் கிராமபுறங்களில் இன்னும் மனிதர்கள் இருக்கின்றார்கள் என்பதையும் அவர்கள் என்ன நினைக்கின்றார்கள்? அவர்கள் தற்போதைய அரசியல் பற்றிய கருத்து என்ன? என்பதையும் நம்மில் பலர் ஆராய்வது இல்லை...

நான் மக்களோடு மக்களாக பழகுபவன்.. வெளியூர் பயணங்களின் போது பக்கத்து சீட் நண்பருடன் பழகி பேசிக்கொண்டு வருபவன்... சின்ன கூரைக்கொட்டாய் டீக்கடைகளில் டீ குடித்து பேச்சு கொடுத்து  அல்லது பேச விட்டு தற்போதைய தமிழக அரசியல்  பற்றிய மக்கள் பார்வையை தெரிந்து கொண்டு இருக்கின்றேன்.


 என்னை விட  பதிவர் அப்துல்லா மக்களோடு பழகி இருக்கின்றார்.. அவர் ஒரு கணிப்பை வெளிபடுத்தினார்.. அவர் திமுக்காரர் என்பதால் அவர் அப்படி ஒரு கணிப்பை வெளியிட்டு இருப்பார் என்று சொல்லுவார்கள்...

நான் அப்போது சொன்னேன்.. திமுக 90லிருந்து 95வரை தனித்து வரும் என்றேன். ஆனால் ஊடகங்கள் மொத்த கூட்டனியுமே 95தான் வரும் என்று  சொல்லின...

தேர்தலுக்கு மிக நெருக்கத்தில் நானும் பதிவர் டாகடர் புருனோவோடு பேசும் போது 100க்குமேல் வரும் என்றேன். அவரும் அதையே ஆமோதித்தார்...100க்கு மேல் திமுக தனித்து வர வாய்ப்பு இருப்பதாக முதலில் நாங்கள் இரண்டு பேர்தான் பேசினோம்.. நாங்கள் சொன்னது போல வரலாம் வராமலும் போகலாம்... இது ஒரு கணிப்பு அவ்வளவே...நாங்கள் சொன்னது போல வந்தாலும் பத்து பைசாவுக்கு புரோயோஜனம் இல்லை வரவிட்டாலும் லாஸ் இல்லை இதுதான் எங்கள்  நிலைப்பாடு....

60 சதத்துக்கு மேல் போனாலே திமுக தனித்து நிறைய சீட்டுகளில் வரும் என்றோம்... அது 70 சதவீதம் வந்தது.. இப்போது கடைசியாக 78 சதவீதம் சொல்லி இருக்கின்றார்கள். பட் இந்த சதவீகித வாக்குக்கு முன்பே 100க்கு மேல் என்று இரண்டு பேரும் முதன் முதலில் பேசி இருந்தோம்..

ஒரு மாதம் வெயிட் செய்யவேண்டியதுதான்...

எலக்ஷனுக்கு ஒன்றரை மாதத்துக்கு முன்பு ஊடகங்கள் திமுக கூட்டனி இந்த முறை மண்ணை கவ்வும் என்றார்கள்... ஆளும்கட்சி பயந்து போய் சீட்டை அள்ளி இரைத்தது

அதனாலே ஜெ... நாமே பெரும்பாண்மை இடத்தில் மக்கள் எழுச்சி காரணமாக வெற்றி பெற் வாய்ப்பு இருக்கும் போது வைகோ  நமக்கு எதற்கு என்று கழட்டி விட்டார்...


ஆனால் மக்களிடம் ஆளும் கட்சி செய்த தவறுகளை மக்களிடத்தில் கொண்டு செல்ல சரியான ஆட்கள்  எதிர்கட்சியில் இல்லை என்பது பெரும்சோகம்...

வடிவேல் பிரச்சாரம் மற்றும் நல திட்டங்கள்  மட்டும் சொல்லி எதிர்கட்சியினரை  அதிகம் திட்டாமல் ஆளும்கட்சி வாக்கு சேகரித்த விதம்...மற்றும் நெகிழ்ச்சியாக பேசிய முதல்வர் என்று மக்கள் திசை திரும்ப ஆரம்பித்தார்கள்..

ஊடகங்கள்  ஏற்படுத்திய மாயை..

முதலில் ஆளும்கட்சி மண்ணை கவ்வும்..

தேர்தல் கமிஷன் ஆளும் கட்சி குடைச்சலையும் மீறி சிறப்பாக செயல் படுகின்றது.. என்று எல்ல்லாம் சொல்லிவிட்டு எலெக்ஷனுக்கு முதல் நாள் ஆளும் கட்சி பணம் வினியோகம் செய்து விட்டார்கள் என்று சொல்லிவிட்டார்கள். அப்ப எலெக்ஷ்ன் கமிஷன் பூப்பறித்துக்கொண்டு இருந்ததா?

அதே போல் பொத்தாம் பொதுவாக எல்லா இடத்திலேயும் பணம் விளையாடி விட்டது என்று சொல்லிவிட முடியாது.. பணம் விளையாடியது  உண்மை ஆளும் கட்சி, எதிர்கட்சி இரண்டுமே அந்த திருப்பணியை செய்தன. அதுதான் உண்மை... அதுவும் குடிசைபகுதி மக்கள் வசிக்கும் இடங்களில் பெரும்பாண்மையாக பணப்பட்டுவாட நடந்தது என்பது உண்மை...

ஸ்டாலின் ஓட்டு போட்டு விட்டு எங்கள் கூட்டனி 230 தொகுதிவரை ஜெயிக்கும் என்றார்... அது ஆசை தோசை ஆப்பளம் வடைதான்..ஆனால் ஒரு தலைவன் அப்படித்தான் தனது தொண்டர்களை உற்சாகபடுத்த சொல்ல வேண்டும்... 100சீட்டுக்கு மேல் திமுக வர வாய்பு இருப்பதாக மக்கள் மனநிலையை வைத்து சொல்கின்றேன்..


70 சதத்துக்கு மேல் போன எல்லா எலெக்ஷனும் திமுக வெற்றி பிரகாசமாக இருக்கும் என்று சொல்லி வருகின்றார்கள்.. பட் இந்த இடத்தில் ஒரு சின்ன நெருடல்.... ஸ்பெக்ட்ரம் மட்டும் இல்லையென்றால்  ஏற்றுக்கொள்ளலாம்.. பட் இந்த எலெக்ஷன்... அப்படியே தலைக்கிழாக மாறவும் வாய்ப்பும் இருக்கின்றது.. அதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்... வளர்ப்பு மகன் திருமணத்தால் அதிமுக எதிர்ப்பு அளவுக்கு ஸ்பெக்ட்ரம் விஷயம் கிராமபுறமக்களிடத்தில் இல்லை அதனால் திமுக வாஷ் அவுட் ஆக வாய்ப்பு இல்லை.............

எது எப்படியோ அடுத்த மாதம் இதே நேரத்தில் தமிழக முதல்வர் யார் என்று தெரிந்து விடும்... யார் முதல்வர் பதவிக்கு வந்தாலும் அவர்களுக்கு எனது வாழ்த்துகள்..எவ்வளவு அடித்தாலும் மக்களுக்கு கொஞ்சம் நல்லது செய்ய எல்லாம் வல்ல பரம்பொருளை வேண்டுகின்றேன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக