ஐக்கிய நாடுகள் சபையினால் இலங்கைக்கு கடும் எச்சரிக்கையொன்று விடுக்கப்பட்டுள்ளதாக அதன் துணைப் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.
ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கைக்கு எதிராக மே தினத்தன்று தமது பலத்தைக் காட்டவுள்ளதாக அரசாங்கம் சவால் விடுத்துள்ளதே ஐ.நா. சபை இலங்கையை எச்சரிக்கைக்குக் காரணம் என்று அறிய முடிகின்றது.
ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பில் இலங்கை அசட்டையாக நடந்து கொள்ள முற்படுகின்றதா என்று கேள்வியெழுப்பியுள்ள அவர், இலங்கையிடம் கையளிக்கப்பட்ட நிபுணர் குழு அறிக்கையின் பிரதியிலிருந்து சில விடயங்கள் ஊடகங்களுக்குக் கசிய விடப்பட்டிருந்தமை குறித்தும் கடுமையாக சாடியுள்ளார்.
அதே நேரம் அவ்வாறு வெளியிடப்பட்டிருந்த விடயங்கள் உண்மைதான் என்பதையும் ஐ.நா. சபை ஏற்றுக் கொண்டுள்ளது.
இருந்த போதிலும் இரு தரப்பு புரிந்துணர்வின் பேரில் ஒரு அங்கத்துவ நாட்டுக்கு வழங்கப்படும் அறிக்கையொன்றின் சில விடயங்கள் வெளியில் கசிய விடப்படுவது கடுமையான விடயம் என்றும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக