ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

சோனியாவின் மதம் என்ன?



காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மதம் என்ன என்று தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல் தர முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது தொடர்பாக தாக்கல் செய்யப் பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
அரியானா மாநில காவல்துறை டி.ஜி.பியாக இருந்தவர் பி.சி.வாத்வா. இவர், மக்கள் தொகை கணக்கெடுப்பு துறையின் பதிவாளர் பொது அலுவ லகத்துக்கு தகவல் அறியும் சட்டத்தின் கீழ் மனு ஒன்றை அனுப்பினார்.

அதில், மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆவணங்களில் இருந்து, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் அவரது மகள் பிரியங்கா, மகன் ராகுல் காந்தி ஆகியோரது மதம் என்ன என்ற விவரத்தை தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.

இந்த தகவலை தெரிவிக்க அரசு மறுத்தது. இதை எதிர்த்து, மத்திய தகவல் ஆணையத்தில் வாத்வா முறையிட்டார். ஆனால், அவரது கோரிக்கையை ஆணையம் தள்ளுபடி செய்து விட்டது.

இதனால், பஞ்சாப் அரியானா உயர் நீதிமன்றத்தில் வாத்வா வழக்கு தொடர்ந்தார். அங்கேயும் மனு தள்ளுபடி ஆனதால், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.

அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.வி.ரவீந்திரன், ஏ.கே.பட்நாயக் ஆகியோர் கொண்ட அமர்வு நேற்று தீர்ப்பளித்தது.

தீர்ப்பில், மதம் என்ன என்ற விவரத்தை வெளியிடுவது, ஒருவரது தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடுவதாகும். எனவே, சோனியா மற்றும் அவரது குடும்பத்தினர் என்ன மதத்தைப் பின்பற்றுகிறார்கள் என்ற விவரத்தை தர உத்தரவிட முடியாது. இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக