ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

ரியாத் புத்தகச் சந்தை: சிறப்பு விருந்தினராக இந்தியா!


சவூதி கலாச்சாரம் மற்றும் செய்தித் தொடர்புத் துறை அமைச்சர் அப்துல் அஸீஸ் அல் கோஜா இன்று ரியாத் புத்தகச் சந்தையைத் தொடங்கி வைக்கிறார். இன்று மார்ச் 1 முதல் 11 வரை பதினோரு நாள்களுக்கு நடைபெற உள்ள இப்புத்தகச் சந்தையில் இந்தியா பிரதான விருந்தினராக உள்ளது. இப்புத்தக கண்காட்சி, மத்தியக்கிழக்கில் பெரியதாகும்.

சவூதி கலாச்சார அமைச்சகத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இப்புத்தகச் சந்தையில் கருத்தரங்குகளும், கலாச்சார அமர்வுகளும், இலக்கிய மாலை நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. எழுத்தாளர்களுடன் வாசகர்கள் நேருக்கு நேர் சந்தித்துப் பேசவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவாம்.
இடைவேளையின்றி, காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை இப் புத்தகச் சந்தை திறந்திருக்கும் என்றும், நாளாந்தம் 35,000 க்கும்  மேற்பட்ட மக்கள் வருகை எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சகப் பிரதிநிதி ஒருவர் நம்மிடம் தெரிவித்தார்.
"விஞ்ஞானம், புனைவுகள், தொழிற்நுட்பம், சட்டம், சிறுவர் இலக்கியம் என்று பல துறைகளின் நூல்கள் குவிந்துள்ளன" என்றார் அவர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக