ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

மதங்கள் அழிந்தால் நன்மைதானே ?

மதங்கள் அழிந்து வருவதாக ஒரு தகவல். அமெரிக்க மாநாட்டில் வாசிக்கப்பட்ட ஆராய்ச்சி கட்டுரை சொல்கிறது. 
அதை பி.பி.சி ஒலிபரப்பியதால் உலகம் பூராவும் சர்ச்சை கிளம்பியுள்ளது. 85 நாடுகளில் சர்வே எடுத்துள்ளனர். எந்த மதத்தையும் சாராதவர் என பதில் சொன்னவர்கள் எண்ணிக்கை அதி கமாம்.

அதை வைத்து பார்க்கும்போது, 9 நாடுகளில் சீக்கிரமே எந்த மதமும் இல்லாமல் போகும் என்கிறது அறிக்கை. ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, செக் குடியரசு, ஃபின்லாந்து, அயர் லாந்து, நெதர்லாந்து, நியூசிலாந்து, சுவிட்சர்லாந்து. பெயர்களை படிக்கும்போதே லந்து என்ற சந்தேகம் வருகிறது.
இங்கிலாந்தில் சென்சஸ் நடக்கிறது. அதில் ஒரு கேள்வி: நீங்கள் எந்த மதத்தை சார்ந்தவர்? மூன்றில் இரு பங்கு மக்கள் ‘எந்த மதத்தையும் சாரவில்லை’ என பதிலளிக்கக்கூடும் என்பது  பி.பி.சி.யின் கணிப்பு. இப்படியே போனால் மொழிகள் அழிந்ததை போல மதங்களும் அழியும் என்கிறார்கள். உலக நடப்பை கவனிப்பவர்கள் நம்ப மாட்டார்கள். மொழிகள் எண்ணிக்கை  சில ஆயிரங்கள். குடி பெயர்தல், தொழில், வேலை, குடும்பம் போன்ற பல காரணங்களால் ஒரு மொழியை பேசுவோர் படிப்படியாக குறைந்து அழிகிறது.  மதத்தை அப்படி கருத முடி யாது. நாத்திகர்கள் அதிகரிப்பது போலவே கோயில்களுக்கு செல்லும் கூட்டமும் பெரிதாகிக் கொண்டே இருக்கிறது. 
ஆன்மிகவாதி என்பதில் மூன்று கட்டங்கள் உண்டு. நமக்கு மேல் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது என்ற நம்பிக்கை கொள்வது ஒன்று. இதுதான் அந்த சக்தி என ஒரு மதத்தை அங்கீகரிப்பது  இன்னொன்று. அந்த மதத்தின் அனைத்து கோட்பாடுகளையும் அப்படியே பின்பற்றுவது மூன்றாவது. பெரும்பாலான நாடுகளில் இரண்டாவது அல்லது மூன்றாவது வழிகளை மக்கள்  தேர்வு செய்கின்றனர். பல மதங்கள் கொண்ட இந்தியாவில் முதலாவது பாதையில் பயணிப்பவர்கள் அதிகம் என மேற்கத்திய பல்கலைக்கழகங்கள் மதிப்பிட்டுள்ளன. நமது நாட்டில் மத  அமைப்புகள் கார்ப்பரேட் கம்பெனிகளை போன்று இயங்குவதாக அவை சுவாரசியமான புள்ளிவிவரங்களை  சேகரித்துள்ளன.  இங்குள்ள அனைத்து மத அமைப்புகளும் மத சம்பிரதாயங்கள் கலவாத பொது சேவைகள் மூலம் சமூகத்தில் முக்கிய பங்காற்றி வருவது ஏனைய நாடுகள் கற்றுக் கொள்ள வேண்டிய பு துமையான பாடம் என சிலாகிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக