ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

யாருக்கு ஓட்டு ? (எல்லாருமே திருடங்கதான்)

இந்தியா ஜனநாயக நாடு என்பதில் நாம் அனைவருக்கும் பெருமை. நம்மை யார் ஆள வேண்டும்? என்பதை முடிவு செய்யும் உரிமை நம்மிடம் உள்ளது. இதுவே நமது ஜனநாயக வலிமை. பொதுவாக பொதுமக்கள் எந்த வேட்பாளரை தேர்வு செய்வர்? எப்படி தேர்வு செய்வர்? கட்சி, ஜாதி, மதம் பார்த்தா? தொகுதிக்கு நல்லது செய்பவரையா? தொலைநோக்கு திட்டம் வைத்திருப்பவரையா? ஓட்டுக்கு பணம் தருபவரையா? யாருக்கு உங்கள் ஓட்டு? என்று வாக்காளர்கள் சிலரிடம் கேட்டோம். அவர்கள் பதில்...


தே.ஞானமுத்து (சென்னை) : எல்லாருமே திருடங்கதான்.


கணேஷ் (எல்.ஐ.சி., முகவர், மதுரை): இதுவரை அரசியல் கட்சிகளை கருத்தில் கொண்டு, ஓட்டளித்து வந்தேன். இந்த முறை தொகுதிக்கு யாரால் நல்லது செய்ய முடியும் என அறிந்து ஓட்டளிப்பேன். ஜாதி, மதம் பார்த்து ஓட்டளிப்பது இல்லை.

முருகேஸ்வரி ( கல்லூரி மாணவி, மதுரை):வேட்பாளரின் ஜாதி, மதம் பார்த்து ஓட்டளிக்க விரும்பவில்லை. தி.மு.க., அ.தி.மு.க,வை விட புதிய நபர்கள் ஆட்சிக்கு வந்தால் நன்றாக இருக்கும். மின்தடை அதிகரிப்பதால் சிரமமாக உள்ளது. இப்பிரச்னைக்கு எந்த கட்சியாலும் உடனடி தீர்வு காண முடியாத நிலையுள்ளது.

ஆர்.சீனிவாசன்(சமூக சேவகர், யா.ஒத்தக்கடை):இலவச அறிவிப்புகளை அனைத்து கட்சிகளும் அறிவிக்கின்றன. இதை நான் பொருட்படுத்துவது இல்லை. நல்ல திட்டங்களை யார் செய்வார்கள்?. நல்ல அறிவிப்புகளை வெளியிடுபவர் யார்? என பார்த்து ஓட்டளிப்பேன். அனைவரும் ஓட்டளிக்க வேண்டும்.

கே.அன்பரசன்(டூவிலர் மெக்கானிக், திண்டுக்கல்): கட்சி பார்த்து ஓட்டளிப்பேன். மின்தடையால் தொழில் பாதிப்பு, நூறு நாள் வேலைவாய்ப்பால் விவசாயத்திற்கு ஆட்கள் கிடைக்காமல் அவதிப்படும் நிலையுள்ளது. தி.மு.க., ஆட்சியில் விவசாய நிலங்கள் ரியல் எஸ்டேட் ஆக மாறியது.

எம்.ஈஸ்வரி (ஓட்டல் உரிமையாளர், திண்டுக்கல்): தி.மு.க., ஆட்சியில் விலைவாசி உயர்ந்துள்ளதை யாரும் மறுக்க முடியாது. யார் ஆட்சி வந்தாலும் விலைவாசியை கட்டுப்படுத்த முடியாது. நல்லது செய்பவர்களுக்கே ஓட்டு.

கே.சித்ரா(குடும்பத்தலைவி, தேனி): முதல்வர் காமராஜர், அரசு பணத்தை பயன்படுத்தி மக்களுக்கு தேவையானதை செய்தார். தற்போதைய கட்சிகள், அரசு பணத்தை பயன்படுத்தி, தாங்கள் வெற்றி பெற தேவையானதை செய்கின்றன. இலவசம் என்ற பெயரில் அரசு பணத்தை மக்களுக்கு லஞ்சம் கொடுப்பதாக, தேர்தல் வாக்குறுதிகள் கொடுப்பதை ஏற்க முடியாது. காமராஜர் போல், மக்களுக்கு நல்லது நினைக்கும் கட்சிக்கு ஓட்டளிப்பேன்.

பி.விக்னேஷ்(துணைபேராசிரியர், தேனி): இலவசங்களை கொடுத்து மக்களை சோம்பேறிகளாக மாற்றுவதை ஏற்க மனமில்லை. இலவசத்திற்கு செலவிடும் பணத்தை நிரந்த முதலீடு செய்து, வேலை வாய்ப்பு உருவாக்கினால் ஆண்டாண்டு காலமாக பல ஆயிரம் குடும்பங்கள் வேலை வாய்ப்பு பெறும். இலவச கலாச்சாரத்தை ஒழிக்கும் கட்சிக்கு என் ஓட்டு.

ஜெபமாலை(குடும்ப தலைவி, ராமநாதபுரம்): ஜாதி, மதம் பார்க்காமல், தொகுதிக்கு யார் நல்லது செய்வார் என கணக்கு போட்டு ஓட்டளிப்பேன். எம்.எல்.ஏ., தான் மாநில ஆட்சியாளரை தேர்வு செய்வார் என்பதை ஓட்டளிக்கும் போது கவனத்தில் எடுத்துக்கொள்வேன்.

பாட்ஷா (வியாபாரம், திருனறியூர் ): ஜாதி, மதம் பார்த்து தான் பல தொகுதிகள் தகுதியான வேட்பாளரை இழந்துவிடுகிறது. என்னை பொறுத்தவரை நல்ல மனிதராக இருக்கும் வேட்பாளரை தான் தேர்வு செய்வேன். பணமோ, இலவசமோ எனக்கு தேவையில்லை. படித்த, பண்பான வேட்பாளர் தான் எனக்கு மட்டுமல்ல, நான் சார்ந்த தொகுதிக்கும் தேவை.

எம்.சுகந்தி(கல்லூரி மாணவி, மானாமதுரை):ஜாதி, கட்சி பார்த்து, எப்போதும் ஓட்டளித்தது இல்லை. இம்முறை, எங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகள் செய்வதாக வாக்குறுதி அளிப்பவருக்கு, எனது ஓட்டு.

ஏ. புவுசியாபானு( கல்லூரி மாணவி, கும்பக்கோணம் ): மக்களுக்கு யார் நல்லது செய்ய விரும்புகிறார்களோ அவருக்கு தான் ஓட்டு. கட்சி, ஜாதி பாகுபாடு பார்க்க மாட்டேன். ஊழல் இல்லாத அரசு உருவாக விரும்புகிறேன். பணம், இலவசம் கொடுக்கும் வேட்பாளருக்கு ஓட்டு இல்லை.

வி.கிருஷ்ணமூர்த்தி( ஓட்டல் உரிமையாளர், நாச்சியார்கோயில் ): இலவசங்களை நம்பி ஏமாற மாட்டேன். வேட்பாளரின் பண்பு, குணநலன்களையும், செயலாற்றல் உள்ளவரா என ஆராய்ந்து ஓட்டு போடுவேன். பணத்திற்காக ஒரு போதும் ஓட்டளிக்க மாட்டேன். செய்ய கூடியதை நம்பும்படி சொல்பவருக்கு என் ஓட்டு.


தேர்தல் வில்லன் : வாக்காளர்கள் பொதுவாக குறிப்பிடுவது மின்தடை. முன்பு பகலில் இரண்டு மணி நேரம், பின்னர் மூன்று மணி நேரம் என இருந்த மின்வெட்டு, இப்போது இரவிலும் தொடருகிறது. இரவில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால், கடுமையாக பாதிக்கப்படுவது தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் தான். இந்த தேர்தலுக்கு மின் தடையே "வில்லன்' ஆகிவிட்டது. யாருக்கு ஓட்டு? என்ற கேள்விக்கு மின்தடை குறித்து சிலர் கூறிய கருத்துக்கள் சாம்பிளுக்கு ..

ஸ்வப்னா ( கல்லூரி மாணவி, மதுரை): போட்டியிடுபவர்களில் மக்கள் நலனுக்கு யார் முக்கியத்துவம் அளிப்பார்கள் என கவனித்து ஓட்டளிப்பேன். வாக்காளர்களை கவரும் திட்டங்களையும், பணம் கொடுப்பவர்களையும் ஆதரிக்க மாட்டேன். மின்வெட்டு இல்லாத தமிழகம் வேண்டும். இதற்கு தீர்வு காண்பவர்களை ஆதரிப்பேன்.

ராஜேஸ்வரி(சுயஉதவி குழு உறுப்பினர், ஸ்ரீவில்லிபுத்தூர்): விலைவாசி உயர்வு கட்டுக்கடங்காமல் உள்ளது. இதை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளுடன் வாக்குறுதி தருபவராக இருக்க வேண்டும். மின்வெட்டு இல்லாத தமிழகம். இருட்டு இல்லாத இரவு வேண்டும். இதை எந்த கட்சி செய்யுமோ அவர்களுக்கு என் ஓட்டு. இலவசங்களுக்காக ஓட்டளிக்க மாட்டேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக