ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

தேர்தல் கமிஷனின் அதிரடியை பாராட்டுங்கள்.

தேர்தல் பிரசாரத்தின் போது அரசியல் கட்சியினர் டீ குடிப்பது கூட வீடியோவில் பதிவு செய்கிறார்கள் தேர்தல் அதிகாரிகள். முந்தைய ஆண்டுகளில் தேர்தல் என்றாலே கலர், கலர் போஸ்டர், தெருவுக்கு தெரு ஒலிபெருக்கியில் பிரசாரம் என களைகட்டும். இம்முறை, தேர்தல் கமிஷனின் வரலாறு காணாத நிபந்தனைகளால், தேர்தலுக்கான பரபரப்பு  குறைந்துள்ளது.  சுவர்களில் அரசியல் கட்சிகளின் சின்னங் களையோ, சுவரொட்டிகளையோ காண முடியவில்லை. அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டுள்ளன.
 

 ஒரே ஒரு பரபரப்பு... வேட்பாளர்கள் திறந்த ஜீப்பிலும், நடைபயணமாகவும் வீடு,வீடாக சென்று வாக்குகளை சேகரிப்பதுதான். இதிலும் தேர்தல் ஆணையம் தலையிட்டு சில அதிரடிகளை அரங்கேற்றி வருகிறது.  வேட்பாளர் வரு வதற்கு சிறிது நேரம்  முன்பு மட்டுமே ஒலிபெருக்கியை பயன்படுத்த வேண்டும்; வேட்பாளருடன் அனுமதிக்கப்பட்ட வாகனம் தவிர, வேறு வாகனங்கள் அனுமதிக்கப்படாது, வேட்பாளர் வரும்போது, பட்டாசு வெடிக்க கூடாது என  பல நிபந்தனைகளை விதித்துள்ள தேர்தல் ஆணையம், இதனை தீவிரமாக கண்காணித்தும் வருகிறது. 

 அதன்படி வாக்காளரிடம் ஓட்டு கேட்பது உள்ளிட்ட வேட்பாளர்களின் அனைத்து நிகழ்வுகளும் வீடியோவில் பதிவு செய்யப்படுகின்றன. குறிப்பாக பிரசாரத்தின் போது, பட்டாசு வெடிக்கப்படுகிறதா? ஆரத்தி தட்டில் பணம் போடுகி றார்களா? எத்தனை  பேர் டீ சாப்பிடுகின்றனர் என அனைத்தையும்  வீடியோவில் பதிவு செய்யப்படுகிறது.

இந்த கெடுபிடியால் வேட்பாளர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். மேலும் தேர்தல் கமிஷனின் அதிரடி கட்டுப்பாடுகளால் பிரசாரம் நடக்கிறதா என்பது தெரியாத அளவுக்கு பிரசாரம் செய்ய வேண்டியுள்ளது. இருந்தாலும், சிறுவர்களை  பிரசாரத்துக்கு பயன்படுத்தக் கூடாது, பட்டாசு வெடிக்கக் கூடாது என்பது உள்ளிட்ட சிறு சிறு உத்தரவுகளை சில அரசியல் கட்சியினர் மீறத்தான் செய்கிறார்கள்.


புகார் கடிதம் :


தமிழக சட்டப்பேரவை தேர்தலில் சர்வாதிகாரி ஹிட்லர் போல் தேர்தல் ஆணையத்தின்  செயல்பாடுகள் இருப்பதாக, ஜனாதிபதி பிரதிபா பாட்டீலுக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது திருநெல்வேலி மாநகராட்சி, பாளையங்கோட்டை மண்டலக் குழு தலைவர் சுப.சீதாராமன், ஜனாதிபதி பிரதிபா பாட்டீலுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: இந்திய தேர்தல் ஆணையம், தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தலை நடத்துகிறது. தேர்தல் அதிகாரிகள் மூலம் நடைமுறைக்கு ஒத்துவராத நிபந்தனைகளை நாள்தோறும் விதிக்கிறது. 

போட்டியிடும் வேட்பாளர்கள், அவரது கட்சி களை  வதைப்பதோடு, தேவையில்லாமல் பொதுமக்களுக்கு தொல்லைகளையும், துயரங்களையும் உருவாக்கி வருகிறது. தேர்தல் காலத்தில் தனி மனித உரிமைகளை மீறி தேர்தல் ஆணையம் செயல்பட்ட வரலாறே இல்லை.  ஆனால், இந்திய தேர்தல்  ஆணையம் சர்வாதிகாரி ஹிட்லர் போல் அடிப்படை உரிமைகளை நசுக்குவதில் எல்லை மீறி செயல்படுகிறது. இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக