மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய மாதிரி மதிப்பீட்டு அலுவலகத்தில், காலியாக உள்ள கள விசாரணையாளர் பணிக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த தகுதி வாய்ந்த நபர்கள். ஒப்பந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இதைப் பற்றிய விவரம் வருமாறு:
பதவியின் பெயர்: கள விசாரணையாளர்
காலியிடங்கள் : 1300
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் புள்ளியியல், பொருளாதாரம், கணிதம் ஆகிய பாடங்களில் ஏதாவது ஒன்றில் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் ஆங்கிலம் மற்றும் அந்தந்த வட்டார மொழிகளில் நன்கு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும், கணினியில் பணிபுரியும் திறனும் அவசியம். ஏற்கெனவே அரசு நிறுவனங்கள் தொடர்பான புள்ளிவிவர சேகரிப்புப் பணியில் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
வயதுத் தகுதி: 1.6.2011 ஆம் தேதியின்படி 21 வயதிலிருந்து 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை: விண்ணப்பதாரர்கள், எழுத்து, கணினிப் பயன்பாடு மற்றும் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அந்தந்த வட்டார அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். தென் மண்டலத்தைச் சேர்ந்தவர்கள் சென்னை, கோவை, மதுரை மற்றும் பெங்களூரு ஆகிய வட்டார அலுவலகங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்கள் சென்றடைய வேண்டிய கடைசித் தேதி: 31.3.2011
அனுப்ப வேண்டிய முகவரி, மாதிரி விண்ணப்பப் படிவம் உள்ளிட்ட மேலும் விவரங்களுக்கு www.mospi.nic.in என்ற இணையதளத்தையோ அல்லது 12-18 மார்ச் 2011 தேதியிட்ட எம்பிளாய்மெண்ட் நியூஸ் இதழையோ பாருங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக