திருவாரூர் தெற்கு ரதவீதியில் உள்ள நகராட்சி அலுவலகம் அருகே தி.மு.க. கூட்டணி தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் வடிவேலு,
இந்த பூமிக்குள் வரும்போது இந்த மண்ணை எடுத்து என் நெற்றியில் பூசிவிட்டுதான் வந்தேன். அப்படி ஒரு மண். இந்த மண். நான் திரையில் காமெடி செய்து அனைவரையும் சிரிக்க வைக்கிறேன். ஆனால் என்ன செய்தாலும் ஒரு மனிதனுக்கு எது தேவைப்படுகிறது.
உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இடம் இவை கண்டிப்பாக தேவைப்படுகிறது. நான் மக்களில் ஒருவனாக பேசுகிறேன். கலைஞர் போட்ட திட்டங்களை கேட்டபோது, கண்ண கட்டுது. எதிர் அணி மிரண்டு கிடக்கிறது. எல்லா பக்கமும் அணைகட்டி வைத்துவிட்டார் கலைஞர்.
கர்ப்பிணி பெண்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். கருவில் உள்ள குழந்தையும் பயன் அடைகிறது. நான் 25 வயதுக்கு மேல்தான் சம்பாதிக்க ஆரம்பித்தேன். ஆனால் கருவில் உள்ள குழந்தை மாதம் மாதம் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறது.

நேற்று ஒருவர் கட்சியை ஆரம்பித்துவிட்டு, நாளைக்கு முதல் அமைச்சர் என்று சொல்லிக்கொண்டு திரிகிறார். என்னவென்றால் அவர் கல்யாண மண்டபத்தின் இடையில் இரண்டு தூண் வந்துவிட்டதாம். அதற்கு ஒரு கட்சியை ஆரம்பித்து, நான் அடுத்த முதல் அமைச்சர் என்று வாழ்ந்து கொண்டிருக்கிறார். நான் கேட்கிறேன் முதல் அமைச்சர் பதவி என்ன மியூசிக்கல் சேரா. அந்த பதவி என்ன சாதாரண பதவியா.
கல்யாண மண்டபத்தில் இரண்டு தூண் வந்ததற்கு, உடனே கட்சியை ஆரம்பித்து முதல் அமைச்சர் என்று சொல்லிக் கொள்கிறீர்களே, நீங்கள் முதல் அமைச்சர் என்றால், நான் பிரதமர். நீங்கள் பிரதமர் என்றால் நான் ஜனாதிபதி, நீங்கள் ஜனாதிபதி என்றால் நான் ஒபாமா. .
ஒருத்தர் என்னிடம் கேட்டார். ஏங்க அவர (விஜயகாந்த்) எதிர்த்து நிற்க போறேன் என்று சொன்னீர்களே, நிற்க போறீங்களா என்றார். அவரை எதிர்த்து நின்றால் எனக்குத்தான் கேவலம். மொத்த டீமையும் காலி செய்வதுதான் என் வேலை. முதல் அமைச்சர் என்று சொல்லிக்கொண்டு 41 சீட் வாங்க போனீர்களே. அங்க என்ன முதல் அமைச்சர் பதவி கொடுப்பார்களா. மிகப்பெரிய வீராப்பா பேசினீங்க.
நான் இந்த அணிக்கு வர காரணம் அண்ணன் அழகிரி மற்றும் அண்ணன் மு.க.ஸ்டாலின் அவர்களும்தான். கலைஞர் ஆட்சிக்கு வந்தால் அவர் சொன்னதை செய்வார். நமக்கு என்ன வேண்டுமோ அதை உரிமையுடன் கேட்டு பெறலாம் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக