எத்தனை முறை பட்டாலும் புத்தி வரவில்லை என்று சொல்லலாம். ஆனால் அமெரிக்கா எப்போதும் இப்படித்தான் நடந்திருக்கிறது. வியட்நாம், ஆப்கானிஸ்தான், இராக் என்று அனைத்து தரப்பிலும் ரணங்களை உருவாக்கிய பல உதாரணங்கள் காட்டலாம். இப்போது லிபியாவில் மூக்கை நுழைத்திருக்கிறது. அடுத்தடுத்து உடைபட்டாலும் நீளம் குறையாதது அங்கிள் சாம் மூக்கு. கடாபி மோசமான சர்வாதிகாரி,
மக்களின் உரிமைகளை நசுக்குகிறார் என்பது நேற்றுவரை அமெரிக்காவுக்கு தெரியாதா, என்ன? போராட்டம் நடத்த வீதிக்கு வரும் பொதுமக்களை ராணுவம் மூலம் போட்டுத் தள்ளுகிறார் என்பதால் சகிக்க முடியாமல் களமிறங்கிவிட்டதாம் அமெரிக்க கடற்படை. எந்த நேரத்திலும் அதற்கு துணைநிற்கும் இங்கிலாந்தும் பிரான்சும் விமானங்களை அனுப்பியுள்ளன.
ஏவுகணை தாக்குதல் மற்றும் விமான குண்டுவீச்சில் கடாபியின் சாதாரண மக்கள் பிணமாக சாய்கின்றனர். லிபிய ராணுவத்தின் சிப்பாய்கள் சீருடை அணிந்து நின்றுகொண்டிருக்கவில்லை. யூனிபார்மை வீசிவிட்டு மக்களோடு கலந்திருக்கிறார்கள். அவசியம் நேர்ந்தால் மனித கேடயங்களாக பயன்படுத்த தயங்கமாட்டார்கள். உயிர் காக்கும் லட்சியத்தோடு புறப்பட்டவர்கள் இன்னும் அதிகமான உயிர் பலிக்கு காரணமாகும்போது உலகம் கண்டிக்கத்தான் செய்யும். இந்தியா அதை செய்திருக்கிறது. லிபியா மீதான தாக்குதல் துரதிர்ஷ்டவசமானது என கூறியுள்ளது.
உடனே மேற்கத்திய பத்திரிகைகளுக்கு கோபம் பொத்துக் கொண்டது. இப்படித்தான் நீண்டகாலமாக ‘அணிசேரா நாடு’ என்ற பெயரில் நாடகமாடி வந்தது இந்தியா; இப்போது ஐக்கிய நாடுகள் சபை தீர்மானத்தில் லிபியாவை ஆதரித்து வாக்களிக்காமல் ஒதுங்கியிருந்து விட்டு வெளியே தாக்குதலை கண்டிக்கிறது என்று எழுதுகின்றன. சீனாவும் ரஷ்யாவும்கூட அமெரிக்க தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினராக உள்ள அந்த நாடுகள் தமது வீட்டோ அதிகாரத்தால் தீர்மானத்தையே தடுத்திருக்க முடியும்; செய்யவில்லை.
லிபியாவுக்குள் தரைப்படை அனுப்பாமல் கடாபியை அகற்றுவது சாத்தியம் என தோன்றவில்லை. அப்படி நடந்தால் ஆப்கன், இராக் போன்று அங்கேயும் புதைமணலில் சிக்கப்போகிறது அமெரிக்கா. லிபியாவின் எண்ணெய் வளம் அதன் கண்ணை மறைக்கிறது.
இதன் விளைவு என்னவாக இருக்கும் என்று, உலக நாடுகளுக்குத் தெள்ளத் தெளிவாகப் புரிந்துள்ளது. இப்போதைக்கு முதல் விளைவாக கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர ஆரம்பித்துள்ளது.
இன்று ஒரே நாளில் 2 டாலர்கள் உயர்ந்துள்ளது பேரலுக்கு. இதனால் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 112 டாலர்களாக அதிகரித்துள்ளது.
அடுத்து வரும் சில நாட்கள் இன்னும் மோசமான விலை உயர்வைச் சந்திக்கக் கூடும் என்றும், கிட்டத்தட்ட ஈராக் போரின்போது நடந்தது போன்ற ஒரு நிலைமை வரக்கூடும் என்றும் எச்சரித்துள்ளனர் சந்தை நிபுணர்கள்.
வளைகுடா நாடுகளான ஏமன் மற்றும் பஹ்ரைனிலும் இப்போது புரட்சி என்ற பெயரில் பெரும் கலவரம் மூண்டுள்ளது. இங்கும் நேச நாடுகள் தலையீடு இருக்கும் என்று கூறப்படுவதால், எண்ணெய் விலை உயர்வை இன்னும் கடுமையாக இருக்கும் என்கிறார்கள்.
0மக்களின் உரிமைகளை நசுக்குகிறார் என்பது நேற்றுவரை அமெரிக்காவுக்கு தெரியாதா, என்ன? போராட்டம் நடத்த வீதிக்கு வரும் பொதுமக்களை ராணுவம் மூலம் போட்டுத் தள்ளுகிறார் என்பதால் சகிக்க முடியாமல் களமிறங்கிவிட்டதாம் அமெரிக்க கடற்படை. எந்த நேரத்திலும் அதற்கு துணைநிற்கும் இங்கிலாந்தும் பிரான்சும் விமானங்களை அனுப்பியுள்ளன.
ஏவுகணை தாக்குதல் மற்றும் விமான குண்டுவீச்சில் கடாபியின் சாதாரண மக்கள் பிணமாக சாய்கின்றனர். லிபிய ராணுவத்தின் சிப்பாய்கள் சீருடை அணிந்து நின்றுகொண்டிருக்கவில்லை. யூனிபார்மை வீசிவிட்டு மக்களோடு கலந்திருக்கிறார்கள். அவசியம் நேர்ந்தால் மனித கேடயங்களாக பயன்படுத்த தயங்கமாட்டார்கள். உயிர் காக்கும் லட்சியத்தோடு புறப்பட்டவர்கள் இன்னும் அதிகமான உயிர் பலிக்கு காரணமாகும்போது உலகம் கண்டிக்கத்தான் செய்யும். இந்தியா அதை செய்திருக்கிறது. லிபியா மீதான தாக்குதல் துரதிர்ஷ்டவசமானது என கூறியுள்ளது.
உடனே மேற்கத்திய பத்திரிகைகளுக்கு கோபம் பொத்துக் கொண்டது. இப்படித்தான் நீண்டகாலமாக ‘அணிசேரா நாடு’ என்ற பெயரில் நாடகமாடி வந்தது இந்தியா; இப்போது ஐக்கிய நாடுகள் சபை தீர்மானத்தில் லிபியாவை ஆதரித்து வாக்களிக்காமல் ஒதுங்கியிருந்து விட்டு வெளியே தாக்குதலை கண்டிக்கிறது என்று எழுதுகின்றன. சீனாவும் ரஷ்யாவும்கூட அமெரிக்க தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினராக உள்ள அந்த நாடுகள் தமது வீட்டோ அதிகாரத்தால் தீர்மானத்தையே தடுத்திருக்க முடியும்; செய்யவில்லை.
லிபியாவுக்குள் தரைப்படை அனுப்பாமல் கடாபியை அகற்றுவது சாத்தியம் என தோன்றவில்லை. அப்படி நடந்தால் ஆப்கன், இராக் போன்று அங்கேயும் புதைமணலில் சிக்கப்போகிறது அமெரிக்கா. லிபியாவின் எண்ணெய் வளம் அதன் கண்ணை மறைக்கிறது.
இதன் விளைவு என்னவாக இருக்கும் என்று, உலக நாடுகளுக்குத் தெள்ளத் தெளிவாகப் புரிந்துள்ளது. இப்போதைக்கு முதல் விளைவாக கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர ஆரம்பித்துள்ளது.
இன்று ஒரே நாளில் 2 டாலர்கள் உயர்ந்துள்ளது பேரலுக்கு. இதனால் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 112 டாலர்களாக அதிகரித்துள்ளது.
அடுத்து வரும் சில நாட்கள் இன்னும் மோசமான விலை உயர்வைச் சந்திக்கக் கூடும் என்றும், கிட்டத்தட்ட ஈராக் போரின்போது நடந்தது போன்ற ஒரு நிலைமை வரக்கூடும் என்றும் எச்சரித்துள்ளனர் சந்தை நிபுணர்கள்.
வளைகுடா நாடுகளான ஏமன் மற்றும் பஹ்ரைனிலும் இப்போது புரட்சி என்ற பெயரில் பெரும் கலவரம் மூண்டுள்ளது. இங்கும் நேச நாடுகள் தலையீடு இருக்கும் என்று கூறப்படுவதால், எண்ணெய் விலை உயர்வை இன்னும் கடுமையாக இருக்கும் என்கிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக