ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

இஸ்லாமிய வங்கிக்கு எதிரான சு.சாமியின் வழக்கு தள்ளுபடி!

கேரள அரசு இஸ்லாமிய ஷரியா  அடிப்படையில் அமைக்கவிருந்த இஸ்லாமிய வங்கிக்கெதிராக ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சாமி தொடுத்த வழக்கை கேரள உயர்நீதிமன்றம் இன்று, சில மணி நேரங்களுக்கு முன்  தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது. இதன் மூலம் நாட்டிலேயே முதன்முறையாக இஸ்லாமிய வங்கி ஒன்று தொடங்கப்படுவதற்கு வழி வகுக்கப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே. ஷலமேஷ்வர்  மற்றும் நீதிபதி P.R. ராமச்சந்திரன் மேனன் அடங்கிய அமர்வு முன் இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.  மனுதாரர் "மதச் சார்பற்ற" நாட்டில் 'மத அடிப்படையில்' வங்கிகள் தொடங்கப்படக்கூடாது என்று வாதிட்டதை நீதிமன்றம் நிராகரித்தது. மத அடிப்படையில் அல்லாமல் ஒரு வட்டியில்லா வங்கி நெறி என்ற அடிப்படையிலேயே இதை அணுகுவதாக அரசுத் தரப்பு தெரிவித்திருந்தது.

இந்த வங்கிக்கு முன்னோட்டமாக 'அல் பரகா நிதி நிறுவனம்' ஒன்றை கடந்த இரண்டாயிரத்து  ஒன்பது முதல் கேரள அரசு நடத்தி வருகிறது என்பதும் அதில் 'ஷரியா' சரியாகப் பின்பற்றப்படுகிறதா என்று ஆராய அறிஞர் குழு அமைக்கப்பட்டுள்ளதும் குறிக்கத்தக்கது.

தீர்ப்புக்குப் பின் நிருபர்களிடம் பேசிய சுப்ரமணிய சாமி "தாம் மேற்கொண்டு உச்ச நீதிமன்றத்தை அணுக உள்ளதாக" தெரிவித்தா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக