ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

பில்லி சூனியத்தால் என் உயிருக்கு ஆபத்து - எடியூரப்பா !


ஆட்சியில் இருந்து தன்னை அகற்றுவதற்காக அரசியல் எதிரிகள் தனக்கு பில்லி சூனியம் வைத்ததாகவும், தற்போது தன்னை கொலை செய்ய பில்லி சூனியம் வைத்துள்ளதாகவும் கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளார்.
 நல்ல   முதல்வர்   ஐயா  நீர் ?


லிங்காயத் என்ற இனத்தவரின் மத அமைப்பான சுத்துர் மடம் சார்பாக மைசூரில் ஏற்பாடு செய்யப்பட்ட திருமண விழாவில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா கலந்து கொண்டார். அப்போது நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் தன்னை முதல்வர் பதவியிலிருந்து அகற்றுவதற்காக அரசியல் எதிரிகள் தனக்கு பில்லி சூனியம் வைத்ததாகவும் ஆனால் அவர்கள் தோல்வி அடைந்து விட்டதாகவும் கூறினார். அவர் மேலும் கூறுகையில், என்னை கொலை செய்வதற்காக பில்லி சூனியம் வைக்கப்பட்டுள்ளது, சட்டசபைக்கு சென்று விட்டு நான் வீடு திரும்புவேனா என்பதையே எனக்கு உறுதியாக தெரியவில்லை, பில்லி சூனியத்தால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
அவருடைய இந்த அறிவிப்பால் கர்நாடக மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக