ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

இன்று முதல் ரேசன் கடைகளில் பருப்பு கிலோ 30 ரூபாய்


தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு கிலோ ரூ. 30-க்கு விற்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 30 ஆயிரம் ரேஷன் கடைகளில் இன்று பிப்ரவரி 1செவ்வாய்க்கிழமை முதல் இவை விற்பனை செய்யப்பட உள்ளது. இதற்கு முன்னர் ரேஷன் கடைகளில் உளுத்தம், துவரம் பருப்பு ரூ. 40-க்கு விற்கப்பட்டது. மேலும் ரூ. 30-க்கு விற்பனையான பாமாயில் ரூ. 25-க்கு விற்பனை செய்யப்பட உள்ளது.
கடந்த வாரத்தில் உளுத்தம், துவரம் பருப்பின் விலை மூட்டைக்கு ரூ. 1,500 வரையிலும், கிலோவுக்கு ரூ. 10 வரையிலும் விலை உயர்ந்தன. இதனால் வெளிச்சந்தையில் முதல் ரக துவரம் பருப்பு கிலோ ரூ. 63-ல் இருந்து ரூ. 73-க்கும், 2-ம் ரக துவரம் பருப்பு ரூ. 55-ல் இருந்து ரூ. 65-க்கும் விற்பனையாகிறது.
இதே போல் கிலோ ரூ. 63-க்கு விற்பனையான முதல் ரக உளுத்தம் பருப்பு ரூ. 68-க்கும், ரூ. 58-க்கு விற்பனையான 2-ம் ரக உளுத்தம் பருப்பு ரூ. 63-க்கும் விற்பனை செய்யப்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக