ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

ஸ்பெக்ட்ரம் முறைகேடு : மாஜி அமைச்சர் ராஜா கைது




2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் நாட்டுக்கு ரூ. 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுத்தியதாக மத்திய கணக்கு தணிக்கைக்குழு அறிக்கை அளித்தது. இதனை தொடர்ந்து எழுந்த எதிர்ப்பு அலைகளால் ராஜா, அமைச்சர் பதவியை கடந்த நவம்பர் 14ம் தேதியன்று ராஜினாமா செய்தார். ராஜா வகித்து வந்த பதவி கபில் சிபலிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் ராஜா எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்ற சூழல் நிலவி வந்தது. எதிர்பார்க்கப்பட்டது போல் ராஜா கைது செய்யப்பட்டுள்ளார்.


ராஜினாமா, ரெய்டு, கைது : கண்ணுக்குத் தெரியாத ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு நாட்டையே உலுக்கியது. நாட்டுக்கு பேரிழப்பை எற்படுத்திய 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு குறித்து பார்லிமெண்ட் கூட்டு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கூறி எதிர்கட்சிகள் ஏற்படுத்திய அமளியால், பார்லிமென்ட் குளிர் கால கூட்டத் தொடர் முற்றிலுமாக முடங்கியது. எதிர்ப்பு வலுக்கவே பதவியை ராஜினாமா செய்தார் ராஜா. இருப்பினும் தான் தவறு ஏதும் செய்யவில்லை என விளக்கங்களையும், பேட்டிகளையும் அளித்து வந்தார்.

அப்போது தான் ரெய்டு நடவடிக்கை தொடங்கியது. முதல் முறையாக கடந்த டிசம்பர் 8ம் தேதியன்று ‌டில்லி மற்றும் சென்னை, பெரம்பலூரில் இருக்கும் ராஜாவின் வீடுகள், அவரது உறவினர்கள் வீடுகளில் ஒரே நேரத்தில் அதிரடியாக ரெய்டு நடத்தப்பட்டது.

ராஜா தொலைதொடர்பு துறை அமைச்சராக இருந்தபோது அவரது தனிச்செயலர் ஆர்.கே. சண்டோலியா, மாஜி செயலர் சித்தார்த்த பெஹூரியா, தொலைதொடர்பு துறை உறுப்பினர் ஸ்ரீதர், துணை இயக்குநர் ஸ்ரீவஸ்தவா ஆகியோரது வீடுகளிலும் ரெய்டு நடைபெற்றது. ஆனால் ரெய்டு வெறும் கண்துடைப்புதான் என எதிர்கட்சிகள் ஒருமித்த குரல் எழுப்பின.

ராஜினாமா, சுப்ரீம்கோர்ட்டின் கண்டிப்பு என அடுத்தடுத்து நெருக்கடிகள் ராஜாவுக்கு வலுத்து வந்த நிலையில் இன்று அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டசபை தேர்தல் வரவிருக்கும் நிலையில் ஸ்பெக்ட்ரம் முறைகேடு சர்ச்சையால் தி.மு.க., வுக்கு அவப்பெயர் ஏற்பட்டு விட்டதாக கூறி கட்சியின் மூத்த பிரமுகர்கள் அதிருப்தி தெரிவித்து வந்தனர். அமைச்சர் அழகிரி, தனது தி.மு.க., தென் மண்டல அமைப்புச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாகவும் தகவல்கள் வெளியாயின. பின்னர் அதனை முதல்வர் கருணாநிதி மறுத்தார். இருப்பினும் ராஜா மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே வரும் சட்ட மன்ற தேர்தலை சந்திக்க ஏதுவாக இருக்கும் என்று கட்சியினரிடையே பேச்சு நிலவியது.இந்நிலையில் தான் ராஜா கைது செய்யப்பட்டுள்ளார்.

ராஜா நாளை கோர்ட்டில் ஆஜர் : 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் கைது செய்யப்பட்டுள்ள ராஜா, மற்றும் தொலை தொடர்பு துறை மாஜி அதிகாரிகள் ஆர். கே.சந்தோலியா, பெஹீரியா ஆகியோர் நாளை பாட்டியாலா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என சி.பி.ஐ., அறிவித்துள்ளது. மேலும் விசாரணையின் போது கிடைத்த தகவல் அடிப்படையில் ராஜா கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் சி.பி.ஐ., அறிவித்துள்ளது.

ராஜா கைது- அரசியல் ரீதியான நடவடிக்கை : ஜெ : ராஜா கைது- அரசியல் ரீதியான நடவடிக்கை : ஜெ : ராஜா கைது தொடர்பாக அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை : ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் ராஜா கைது மட்டும் போதாது. இந்த விவகாரத்திற்கு காரணமான முதல்வர் குடும்ப உறுப்பினர்களையும் கைது செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் பார்லிமென்ட் கூட்டுக்குழு நடவடிக்கை தேவை என்பதையும் அ.தி.மு.க ., கைவிடாது. தமிழக சட்டசபை தேர்தலை மனதில் வைத்தே ராஜா தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். ராஜா கைது மூலம் பல கேள்விகள் எழுந்துள்ளது. அதில், பல கேள்விகளுக்கு பதில் அளிக்கப்படவில்லை. இது ஒரு தாமதமான நடவடிக்கை. ராஜா 3 ஆண்டுகளுக்கு முன்னரே கைது செய்யப்பட்டிருக்க வேண்டும். அல்லது 2 ஆண்டுக்கு முன்னரோ, ஒராண்டுக்கு முன்னரோ அல்லது சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்தவுடனோ கைது செய்யப்பட்டிருக்க வேண்டும் என கூறியுள்ளார்.



அ.தி.மு.க., கொண்டாட்டம்: அ.தி.மு.க., வினர் ராஜா கைதை வரவேற்கும் விதமாக பட்டாசு வெடித்து கொண்டாடினர். திருநெல்வேலி மற்றும் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த அ.தி.மு.க., வினர் ராஜா கைதை வரவேற்கும் விதமாக பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக