ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

பேச்சு வார்த்தை தோல்வி! புதுவை ரங்கசாமி ராஜினாமா

புதுவை: புதுவை காமராசர் என அழைக்கப்படும் புதுவை முன்னாள் முதல்வர் ரங்கசாமியுடன் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் நடத்திய சமரச பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது இதை தொடர்ந்து ரங்கசாமி தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வார் என செய்திகள் வெளியாகி உள்ளன.
புதுவை மாநிலத்தின் முதல்வராக ரங்கசாமி இருந்தபோது காங்கிரஸ் கட்சிக்குள் அவர்மீது சிலருக்கு அதிருப்தி ஏற்பட்டது.  அதிருப்தி அடைந்த எம்.எல்.ஏக்களும், அமைச்சர்களும் ரங்கசாமியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என டெல்லிக்கு சென்று கட்சி மேலிடத்திடம் போர்க்கொடி தூக்கினர். இதையடுத்து ரங்கசாமி பதவி விலக்கப்பட்டார். அவருக்கு பதில் அமைச்சர் வைத்திலிங்கம் முதல்வர் பொறுப்பேற்றார்.
இதனை தொடர்ந்து ரங்கசாமியின் ஆதரவாளர்கள் சிலரும் கட்சியில் இருந்தும்,  பதவியில் இருந்தும் நீக்கப்பட்டனர். இதனால்  நீக்கப்பட்டவர்கள் ஒன்றுகூடி ரங்கசாமியை தனிக்கட்சி துவங்க கோரிக்கை வைத்தனர். ரங்கசாமியும் காங்கிரசில் இருந்து விலகி புதிய கட்சி தொடங்க திட்டமிட்டுள்ளார். கட்சி தொடங்குவதற்கு ஏதுவாக எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்கிறார் ரங்கசாமி.
ரங்கசாமி ராஜினாமா செய்யும் முடிவுடன் இருப்பதால் அவருடன் மாநில காங்கிரஸ் தலைவர்கள் பேச்சு வார்த்தை நடத்தினர். ராஜினாமா முடிவில் இருந்து பின்வாங்க ரங்கசாமி திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இன்று பிற்பகலில்  புதுவை சட்டமன்ற சபாநாயகரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அவரிடம் வழங்கவிருப்பதாகவும் தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக