ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

குவைத் சுதந்திர தினத்தை முன்னிட்டு மாதா மாதம் 1.60 இலட்சம் இலவசம்


குவைத் : குவைத்தில் வரும் பிப்ரவரி 25, 26 தேதிகளில் சுதந்திர தினம், விடுதலை தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு உலகின் மிக நீளமான கொடி குவைத்தில் தயாரிக்கப்படுவதை இந்நேர வாசகர்களுக்கு ஏற்கனவே அறிவித்திருந்தோம். தற்போது குவைத் குடிமக்கள் அனைவருக்கும் மாதா மாதம் 1.60 இலட்சம் ரூபாய் மற்றும் உணவு பொருட்கள் இலவசமாய் வழங்க அரசாங்கம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.


வரும் பிப்ரவரி மாதம் 25, 26 தேதிகளில் குவைத் 50வது சுதந்திர தினத்தையும், ஈராக் ஆக்கிரமிப்பிலிருந்து விடுதலையான 20வது ஆண்டையும், தற்போதைய அமீர் ஷேக் சபா அல் அஹ்மத் அல் சபாஹ் பதவியேற்ற 5 வாது ஆண்டு விழாவையும் கொண்டாடுகிறது. இச்சூழலில் குவைத்தில் வாழும் 11 இலட்சம் குவைத் குடிமக்களுக்கு மாதா மாதம் 1,000 குவைத் தினார் (1.60 இலட்சம் ரூபாய் ) மற்றும் வீட்டிற்கு தேவையான அரிசி, கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் இலவசமாகவும் 14 மாதங்களுக்கு வரும் பிப்ரவரி முதல் மார்ச் 2012 வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எல்லா நாடுகளும் பற்றாக்குறை பட்ஜெட் போடும் கால கட்டத்தில் 300 பில்லியன் டாலர் சொத்துக்கள் வைத்துள்ள குவைத் அரசாங்கம் உபரி தொகை பட்ஜெட் 11 வருடங்களாக தாக்கல் செய்வது குறிப்பிடத்தக்கது. தன் நாட்டு குடிமக்களுக்கு பிறப்பு முதல் இறப்பு வரை மானியம் வழங்குவதுடன் அவர்களின் வருமானத்திற்கு வருமான வரி எதுவும் கட்ட தேவையில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே குவைத் தன் நாட்டு குடிமக்களுக்கு கொடுக்கும் அரிசி, கோதுமை, பால் பவுடர் உள்ளிட்ட பொருட்கள் அவர்களின் தேவைக்கு போக மீதமுள்ளவற்றை வெளி சந்தையில் விற்று விடுவது வழக்கம். குவைத்தில் தற்போது எல்லா பொருட்களின் விலையும் விஷம் போல் ஏறி வரும் சூழலில் குவைத் குடிமக்களுக்கு இச்செய்தி தேனாய் இனிக்கும் என்பது ஐயமில்லை. மொத்தம் 4 பில்லியன் டாலர்கள் இதற்காக செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே பணி புரியும் 3,60,000 குவைத்தியர்களில் 80 சதவிகிதத்திற்கும் மேலோனோர் அரசாங்க பணிகளில் பணிபுரிவதும் சராசரி சம்பளம் 1000 குவைத் தினார் (1.60 இலட்சம் ரூபாய்) என்பதும் கவனிக்கத்தக்கது. ஆனால் இவ்வறிப்புகளால் குவைத்தில் பணிபுரியும் 24 இலட்சம் வெளிநாட்டவர்களுக்கு எப்பயனும் இல்லை என்பதோடு இதன் காரணத்தால் ஏறும் விலைவாசியும் சகித்து கொள்ள வேண்டும் என்பது தான் வேதனையானது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக