ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

ஓடும் பஸ்ஸில் துணிகரம்! 3 கிலோ தங்கம் கொள்ளை

மதுராந்தகம்: பேருந்தில் பயணம் செய்த தங்க வியாபாரிகளிடமிருந்து 3 கிலோ 300 கிராம் எடையுள்ள தங்கக்கட்டிகளை மர்ம நபர்கள் களவாடிச் சென்றது,  அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சவுகார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் தங்க நகை வியாபாரி மிஸ்ரிலால். இவருடைய மகன்கள் பரத் குமார் மற்றும் ரஞ்சித் குமார். இருவரும் தங்க நகை வியாபாரம் செய்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் தங்க நகை வியாபாரிகளிடமிருந்து தங்கக்கட்டிகளை வாங்கி வந்து, அவர்கள் விரும்பும் நகைகளை செய்து கொடுப்பர். கடந்த 11ம் தேதி, இருவரும் தாங்கள் செய்த நகைகளை வியாபாரிகளிடம் கொடுத்துவிட்டு, தங்கக் கட்டிகள் வாங்கி வருவதற்காக, சென்னையிலிருந்து நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பூர் உட்பட மாவட்டங்களில், நகை வியாபாரிகளிடம். தாங்கள் செய்த நகைகளை விற்பனை செய்தனர்.
இதற்கு பின் அவர்களிடமிருந்து வாங்கிய 3 கிலோ 300 கிராம் எடையுள்ள தங்கக் கட்டிகளுடன், சென்னை புறப்பட முடிவு செய்தனர். தங்கக் கட்டிகளை சூட்கேசில் எடுத்து கொண்டு, கடந்த 15ம் தேதி இரவு, திருப்பூரிலிருந்து தனியார் டிராவல்ஸ் பஸ்சில் சென்னை புறப்பட்டனர். 16ம் தேதி காலை 5.30 மணிக்கு, மேல்மருவத்தூர் வந்தபோது, தங்கக் கட்டிகள் இருந்த சூட்கேஸ் மாயமாகியிருப்பதை கண்ட சகோதரர்கள் அதிர்ச்சியடைந்தனர். பஸ் முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை. பஸ்சில் பயணம் செய்தவர்களில், இருவர் திண்டிவனத்திலும், நான்கு பேர் மேல்மருவத்தூரிலும் இறங்கியுள்ளனர். அவர்கள் தங்கக் கட்டிகளை அபேஸ் செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. கொள்ளை போன தங்கக் கட்டிகளின் மதிப்பு 70 லட்ச ரூபாய்.
இது குறித்து, பரத் குமார் அளித்த புகாரில், மேல்மருவத்தூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கொள்ளையர்களைப் பிடிக்க மேல்மருவத்தூர் காவல் ஆய்வாளர் சிவக்குமார், அச்சிறுப்பாக்கம் ஆய்வாளர் பொன்னுசாமி, உதவி ஆய்வாளர் தமிழ்வாணன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக