ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

ரூ.8.63 கோடியை திருப்பிச்செலுத்துக : நித்தியானந்தாவுக்கு அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு '[



கலிபோர்னியாவை சேர்ந்த பொபட்லால் சாவ்லா எனும் முன்னாள் சீடரிடமிருந்து நன்கொடையாக பெற்ற ரூ. 8.63 கோடியை நித்தியானந்தா உடனடியாக திருப்பி செலுத்த வேண்டுமென அமெரிக்க நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

அமெரிக்காவின் கல்போர்னிய மாகாணத்தில் வேத பல்கலைக்கழகம் ஒன்றை தொடங்குவதற்காக நித்தியானந்தா பவுண்டேஷன் நிறுவனத்திற்கு ரூ.9.35 கோடி நன்கொடையாக் அளித்திருந்தார் அந்த சீடர்.

இந்நிலையில் நடிகை ரஞ்சிதாவுடனான விவகாரம் வெளியானதை அடுத்து, ஆசிரமத்தை விட்டு வெளியேறிய சாவ்லா, தான் கொடுத்த நன்கொடையை திருப்பி தரும்படி கலிபோர்னிய மாகாணத்தின் மாவட்ட நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தார்.

கடந்த 2ம் திகதி அவ்வழக்கின் இறுதி விசாரணை நடந்தது. அப்போது நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், நித்தியானந்தா பவுண்டேஷன் ஒரு மோசடியான நிறுவனம். பாதிக்கபப்ட்ட சாவ்லாவுக்கு உடனடியாக அவர் வழங்கிய நிதித்தொகையை திருப்பி செலுத்த வேண்டுமென தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இத்தீர்ப்பை இன்று நீதிபதிகள் உறுதி செய்துள்ளனர்.

இதையடுத்து நித்தியானந்தா அறக்கட்டளைக்கு நிதியுதவி வழங்கிய ஏனைய பலரும் நிதியை திருப்பி கேட்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கபப்டுகிறது. கலிபோர்னிய நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை லெனின் கருப்பன் வரவேற்றுள்ளார்.

இவ்வழக்கு தீர்ப்பு நகல்களை இந்திய நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் அவர் முடிவு செய்துள்ளார். இந்த வழக்கை ஆதாரமாகக் கொண்டு தமிழ்நாடு, கர்நாடக நீதி மன்றங்கள் செயற்பட்டால் நித்தியானந்தாவுக்கு மேலும் ஒரு பின்னடைவாக இருக்கும் என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக