ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

இந்தியர்களுக்கு ஆன் அரைவல் விசா ரத்து?! : இலங்கை மறுப்பு

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல், இலங்கைக்கு வரும் இந்தியர்களுக்கான ஆன் அரைவல் விசா இரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட செய்திகளில் உண்மையில்லை என இலங்கை குடிவரவு, குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் நாயகம் டபிள்யூ.ஏ.சூலாநந்த பெரேரா தெரிவித்துள்ளார்.

இனி வரும் காலங்களில் இலங்கை வரும் இந்தியர்கள் முன்கூட்டியே இலங்கை தூதரகத்தில் விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனவும் இதற்கென இணையத்தளம் ஊடாகவும் விண்ணப்பிக்க முடியும் எனவும் இலங்கை குடிவரவு திணைக்கள செய்திகளை மேற்கோள் காட்டி ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.

'இந்தியா மட்டுமல்லாது சுமார் 78 நாடுகளுக்கு இதே போன்றதொரு நடைமுறை அமல் படுத்தப்படவிருக்கிறது.  எனினும் மாலைதீவு மற்றும் சிங்கப்பூர் குடியுரிமை உள்ளவர்கள் வழமை போல இலங்கைக்கு வரும் போது விசா வழங்கப்படவிருக்கிறது' என அச்செய்தி மேலும் தெரிவித்திருந்தது.

ஆனால் இச்செய்தியில் உண்மையில்லை எனவும், இணையத்தின் ஊடாக விசா வழங்கும் நடைமுறை பற்றியே தான் கலந்துரையாடியதாகவும் தெரிவித்துள்ள சூலாநந்த, இந்திய ஊடகங்கள் எதற்கும் இப்படி ஒரு பேட்டி கொடுக்கவில்லை என கூறியுள்ளார். மேலும் இந்தியர்களுக்கான ஆன் அரைவல் விசா நடைமுறையை இலங்கை இன்னும் நீக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னர் இலங்கை அரசு, இந்த வருடத்தை  'Visit Sri Lanka Year' என அறிவித்துள்ளதுடன் சுற்றுலா பயணிகளை அதிகமாக கவர்வதற்காக ஆன் அரைவல் விசா மூலம் 30 நாட்கள் அவர்கள் நாட்டுக்குள் தங்கியிருக்கலாம் எனும் நடைமுறையை விரிவுபடுத்தியிருந்தது.  நீண்டகால யுத்தம் முடிவடைந்ததை அடுத்து, கடந்த வருடம் இலங்கைக்கு 600,000 சுற்றுலா பயணிகள் வருகை தந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக