ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

ஈரானில் பொதுமக்கள் முன்னிலையில் ஐந்து பேருக்கு தூக்கு தண்டனை!

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் நேற்று, ஐந்து பேருக்கு பொதுமக்கள் முன்னிலையில் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டது.
ஷிராஸ் எனும் நகரில், நூற்றுக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில் இத்தூக்குத்தண்டனை வழங்கப்பட்டது. இவர்கள் கொலை,பாலியல், வல்லுறவு, கடத்தல் உள்ளிட்ட குற்றச்செயல்கள் என்பவற்றுடன் நேரடியாக தொடர்புடையவர்கள் எனவும், இக்குற்றங்களுக்கு அதிகபட்சமாக தூக்குத்தண்டனை வழங்கப்படுவது நியாயமானதே என ஈரான் அரச விதிமுறைகள் தெரிவிக்கின்றன.


இவ்வருடத்தில் மாத்திரம் 143 பேருக்கு இவ்வாறு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.  சீனாவிற்கு அடுத்த படியாக அதிகபடியான மரண தண்டனைகள் ஈரானில் நிறைவேற்றப்படுகின்றன. இதற்கு சர்வதேச மனித உரிமைகள் குழுக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.



உங்கள் கருத்துக்கள் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக