ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

நீங்கள் Facebook கணக்கை அழிக்க வேண்டும் ஏனெனில் : 10 காரணங்கள்


உங்கள் facebook கணக்கை நிரந்தரமாக அழிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. இதற்கான பத்து காரணங்களை கீழே பாருங்கள். இதை வாசித்த பின்னராவது உங்கள் பாதுகாப்பில் அக்கறை இருந்தால் அழித்து விடுங்கள். இது கோரிக்கை அல்ல. எச்சரிக்கை. நீங்கள் உங்கள் மீதான நம்பிக்கை உடன் இப்போது திடகாத்திரமான முடிவை எடுக்க தயாராகுங்கள்.


காரணம் # 1: நீங்கள் அடிமையாகி விட்டீர்கள் 

நீங்கள் ஒரு நல்ல மாணவனாக இருக்கலாம். அல்லது நல்ல காதலியாக நல்ல தந்தையாக, நல்ல அம்மாவாக இருக்கலாம். ஆனால் நிச்சயம் இந்த Facebook உங்களின் இந்த உறவுநிலைகளில் இது பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதை விட்டு உங்களால் வெளி வர முடிகிறதா ?



காரணம் # 2 பேஸ்புக் வைரஸ்களால் நிறைந்து விட்டது

facebook virusஇவை உங்கள் தனிப்பட்ட தகவலை திருடுகின்றன. அத்துடன் இவை உங்களை தவறான செய்திகளை பிரசுரித்து உங்களை உங்க நட்பு வட்டத்தில் தலை குனிய வைக்கும். இது நிர்வாண வீடியோக்களை பரப்பும். உங்கள் சுய விபரங்களை மாற்றிவிடும் என்பதை நீங்கள் அறிந்து இருப்பீர்கள் .




personnel informationகாரணம் # 3 தனிப்பட்ட தகவல்கள் பரகசியமானவை

நீங்கள் இலவசமாக facebookகை பயன்படுத்துகிறீர்கள். அவர்கள் உங்கள் தரவுகளை விற்று பணம் சம்பாதிக்கிறார்கள். உங்கள் ஸ்பாம் மெயில்கள் இதற்க்கு சிறந்த உதாரணம். உங்கள் விருப்பு வெறுப்புக்கள் அறியப்பட்டு உங்களை நிறுவனங்கள் அறிய வழி வகை செய்து கொடுக்கிறார்கள் facebook நிர்வாகம்.


காரணம் # 4 போலி கணக்கு நிறைந்துவிட்டன - நீங்கள் அதில் ஒருவராக இருக்கலாம்

நீங்கள் கூட உங்கள் தகவல்களை போலியானதாக வழங்கி இருக்கலாம். நீங்களும் உங்கள் நிறைவேறா எண்ணங்களை வெளிப்படுத்த இதை பயன் படுத்தலாம்.அண்மையில் ஒரு சம்பவம். என் ஆண் நண்பர் ஒருவரின் facebook திரையை பார்த்தேன். அதில் 500க்கு மேல் நண்பர்கள். அதில் அதிகளவு பெண் நண்பர்கள். ஒரே ஆச்சரியம். அவர்கள் இவருடன் உறவாடிய சொல்லாடல்கள் அவரை நல்லவர் போல ஒரு மாயையை உண்டாக்கி இருந்தன. இச்சந்தேகத்தை அவரிடமே கேட்டேன். அப்போது தான் தெரிந்தது. அவரே பல போலி பெண் கணக்குகளை உருவாக்கி இருக்கிறார். அதன் பின்பு அந்த கணக்குகளில் இருந்து தனது பக்கங்களில் நல்ல பல கருத்துக்களை எழுதி இருக்கிறார். இதை பார்த்த ஏனையோரும் இவர் நல்லவர் என்று இணைத்து இருக்கிறார்கள். இது தான் றால் போட்டு சுறா பிடிக்கிறது என்பது.

இவ்வாறான் கணக்கு பற்றி சிறு புள்ளி விபரம்.:

காரணம் # 5 பாதுகாப்பற்ற Applications

unsafe facebook applicationsfacebookஇல் உள்ள பல applications உங்கள் தனிப்பட்ட தகவலை பெறுகின்றன. இப்போது யார் வேண்டுமானாலும் இவ்வாறான செயலிகளை உருவாக்க முடிகிறது. பல தளங்களில் உள் நுழைய நீங்கள் உங்கள் facebook கணக்கை பணயம் வைத்து இருப்பீர்கள். ஞாபகம் இல்லையா? Login with Facebookஇப்படி ஒரு லிங்க். உங்களை கைப்பற்றி விடும். 

காரணம் # 6 Facebook உடன் நேரடி தொடர்பு கொள்ள வழிகள் இல்லை.

ஒரு பெரிய நிறுவனம் Google  அனைத்து தகவலையும்அனைவருக்கும் வழங்குகிறது! அத்துடன் அவர்களை மிக இலகுவாக தொடர்பு கொள்ள முடிகிறது. ஆனால் facebookகை உங்களால் நேரடியாக தொடர்புகொண்டு உங்கள் பிரச்சனைகளை தெரிவிக்க முடிவதில்லை. ஒருகணக்கை நீக்க வேண்டும் எனில் நாட்டின் அரசால் மட்டுமே முடியும். அதுவும் உத்தரவாக அன்றி கோரிக்கையாக மட்டுமே. 

காரணம் # 7 உங்கள் தனியுரிமை உங்கள் எதிரியாக முடியும்

your own enemyநீங்கள் பகிர்ந்த புகைப்படங்கள் வீடியோக்கள் உங்களுக்கே எதிர் காலத்தில் எமனாகிறது. இதற்கு பல உதாரண செய்திகளை நீங்கள் தினமும் படித்துக்கொண்டு தானே இருக்கிறீர்கள்.

நீங்கள் உங்கள் கணக்கை அழித்த பின்பு தினமும் பல மணி நேரம் மிகுதியாகும்.இது உங்கள் விலை மதிப்பு அற்ற நேரம். இதை பயனுள்ள தளங்களுடனும் அல்லது உங்கள் குடும்பத்துடனும் செலவிடுங்கள்.

தினமும் இணைய வெளியில் உங்கள் நேரத்தை வீணாக போக்க பல தளங்கள் தூண்டுகின்றன. எனினும் ஒரு நாள் என்பது 24 மணித்தியாலங்களை மட்டும் கொண்டது. இது அதிகரிப்பதோ குறைவதோ இல்லை.


நீங்கள் இதில் ஒரு காரணத்தையாவது நிராகரிக்க முடிகிறதா? அப்படி எனில் உங்கள் மோசமான தருணங்களை நீங்கள் அதிகம் விரும்புகிறீர்கள்.
இப்போதே உங்கள் கணக்கை நீக்க தயாராகுங்கள். உங்கள் நண்பர்களையும் இதற்கு பரிந்துரையுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக