ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

லண்டனில் காடையர்களால் சுடப்பட்டு கோமாவில் இருந்த ஐந்து வயது துஷா. தற்போது புன்னகையுடன் காணப்படும் படங்கள் வெளியீடு! (படங்கள்)


லண்டனில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து மீண்ட ஈழத் தமிழ்ச் சிறுமியான துஸா கமலேஸ்வரன் புன்முறுவலுடன் குதூகலமாகக் காணப்படுகின்ற படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

துஸா என்கின்ற ஐந்து வயதேயான இந்தச் சிறுமி லண்டனில் உள்ள தனது மாமாவின் கடையில் சந்தோசமாக நடனம் ஆடிக் கொண்டிருந்த வேளையில் தான் காடையர்களின் துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளானார்.
பிரித்தானியாவின் ஆயுத கலாசாரத்துக்கு இளைய சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் பலிக்கடாவான இந்தச் சம்பவம் பல்வேறு தரப்பினரின் மத்தியிலும் ஏராளமான அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
டான்சராக வர வேண்டும் என்று கனவு கண்ட இந்தச் சிறுமி தற்போது சக்கர நாற்காலியின் உதவியுடன் தான் நடமாடி வருகின்றார்.
தெற்கு லண்டனில் உள்ள சுப்பர் மாக்கெட் ஒன்றில் குறித்த துயரச் சம்பவம் இடம்பெற்று தற்போது ஒரு வருடம் ஆகின்றது.
இன்றைய தினம் அங்கு இடம்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நேரடியாக துசாவும் அவரது தாயாரான சர்மிளாவும் கலந்து கொண்டனர்.
இலங்கையின் இனப்பிரச்சினை காரணமாக அங்கிருந்து வெளியேறிய இந்தச் சிறுமிக்கு லண்டனில் இடம்பெற்ற இந்த துயரச் சம்பவத்தை யாராலும் மறந்து விட முடியாது.
துப்பாக்கிச் சூட்டை நடாத்திய காடையர்கள் தற்போது ஆயுள் தண்டனையை எதிர் நோக்குகின்றமை குறிப்பிடத்தக்கது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக