அமெரிக்க நிறுவன உதவியுடன் வங்காளதேசம் செயற்கை கோள் ஒன்றை வடிவமைத்து விண்ணில் செலுத்தவிருக்கிறது.
இது தொடர்பாக அமெரிக்காவின் ஸ்பேஸ் பாட்னர்சிப் இன்டர்நேஷனல் நிறுவனம் வங்காளதேசம் நாட்டைச் சார்ந்த தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்துடன் 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கான திட்ட ஒப்பந்தத்தை நேற்று டாக்காவில் மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் அமெரிக்காவின் ஸ்பேஸ் பாட்னர்சிப் நிறுவனத்தின் மானேஜிங் டைரக்டர் புரூஸ் டீ கிரஸல்ஸ்கி கூறும் போது பாரிலாண்டை சார்ந்த நிறுவனம் இச் செயற்கை கோளை வடிவமைக்கப்பட்டிருப்பதாகவும் கட்டமைப்பு மற்றும் விண்ணில் செலுத்துவதற்கு வேறு ஒரு நிறுவனம் வாடகைக்கு எடுக்கப்பட இருப்பதாகவும் 2015 ம் ஆணடில் செயற்கை கோளை விண்ணில் செலுத்த விருப்பதாகவும் கூறியுள்ளார்.
இச் செயற்கைக்கோள் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்தவும், வானிலை தொடர்பான தகவல்கள் பெறப்பட்டு இயற்கை பேரழிவுகள் குறித்தான முன் எச்சரிக்கை விடவும் மற்றும் இயற்கை வளங்கள் குறித்தான வரைபடம் தயாரிக்கவும் பயன்படுத்தப்படும் என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த செயற்கைகோள் தயாரிக்க 150 மில்லியன் அமெரிக்க டாலர் செலவு ஆகும் எனவும் வங்காளதேசம் ஓர் ஆண்டிற்கு 11 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் பிற நாட்டு செயற்கை கோள்களை வாடகைக்கு பயன்படுத்தி வருவதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக