புதுக்கோட்டை மாவட்டம் கில்லுக்கோட்டையை சேர்ந்தவர் ஆசைதம்பி.கட்டிட தொழிலாளி.அவரது மனைவி லதா. ஆசை தம்பி திருமணம் முடிந்ததும் தனது மாமியார் கலாவதி வீட்டில் மனைவியுடன் குடும்பம் நடத்தி வந்தார்.
கடந்த 5 நாளுக்கு முன்பு ஆசை தம்பி திருவெறும்பூர் அருகே உள்ள விளாமரத்துப்பட்டியில் உள்ள குளத்தில் கழுத்து நெரி பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து துவாக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர்.
நேற்று மாலை திருச்சி மாஜிஸ்திரேட்டு 3-வது கோர்ட்டில் பழனி வேல் என்பவர் சரண் அடைந்தார். இவர் ஆசை தம்பியின் மாமியார் கலாவதியின் தம்பி ஆவார். கோர்ட்டில் அவர் கொடுத்து உள்ள வாக்குமூலம் விவரம் வருமாறு:-
எனது அக்காவுக்கும், வட்டி ராமலிங்கம் என்பவருக்கும் தொடர்பு இருந்தது. இந்த விசயம் ஆசைதம்பிக்கு தெரிய வந்தது. அவர் எனது அக்காள் மகளிடம் தெரிவித்து உள்ளார். இதனால் குடும்பத்தில் பல்வேறு பிரச்சினைகள் எழுந்தது. எனவே எனது அக்காள் என்னிடம் வந்து ஆசை தம்பி அடிக்கடி வந்து தொந்தரவு செய்ததாக கூறினார்.
உடனே நான் எனது நண்பர்களிடம் தெரிவித்தேன். அவர்கள் உதவிகள் மூலம் ஆசை தம்பியை கொன்று அங்கு உள்ள குளத்தில் பிணத்தை வீசினோம். இவ்வாறு அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக