ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

தூக்கியெறிக்கப்பட்ட மொபைல் போன்களிலிருந்து வருடத்துக்கு 1,500 கிலோ தங்கம் பிரிக்கப்பட்டுள்ள ஆச்சர்யம்.(வீடியோ)


சீனாவில் தூக்கியெறிக்கப்பட்ட 100 மில்லியன் மொபைல் போன்களிலிருந்து 1,500 கிலோ தங்கம், 1 மில்லியன் கிலோ அளவிற்கு தாமிரம், 30 ஆயிரம் கிலோ அளவிற்கு வெள்ளி உள்ளிட்டவைகள் பிரித்து எடுக்கப்பட்டுள்ளது என்றால் நம்ப முடிகிறதா?

ஆனால் அதுதான் உண்மை என்கிறது சீனா. இதுகுறித்து, சீனாவிலிருந்து வெளிவரும் பீபிள்ஸ் டெய்லி பத்திரிகை வெளியிட்டுள்ள 
செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சர்வதேச அளவில் ஒவ்வொரு ஆண்டும் 400 மில்லியன் அளவிற்கு மொபைல்போன்கள் தூக்கி வீசப்படுவதாகவும், சீனாவில் மட்டும் 100 மில்லியன் மொபைல்போன்கள் தூக்கியெறிக்கப்படுகின்றன.
இதன்மூலம், சீனாவில் மட்டும் 150 கிராம் தங்கம், 100 கிலோ காப்பர் மற்றும் 3 கிலோ சில்வர் பிரித்தெடுக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக