குடிப்பழக்கத்திற்கு அடிமையான பலர் பணம் இல்லாத போதும் கூட ஓசியில் மது அருந்தி விட்டு அதிலிருந்து தப்பிக்க பல கில்லாடித்தனத்தில் ஈடுபடுவதை கேள்விப்பட்டிருக்கிறோம்.
இதையெல்லாம் மிஞ்சும் வகையில் அவுஸ்திரேலியாவில் 4 பேர் ஒரு விசித்திர தந்திரத்தில் ஈடுபட்டார்கள். மெல்போர்ன் நகரில் பிரமாண்ட கட்டிடத்தில் சுமார் 800 அடி உயரத்தில் 55-வது மாடியில் அமைந்திருக்கும் பிரபல மதுபான விடுதிக்கு இந்த 4 பேரும் சென்றார்கள்.
இவர்கள் ஒவ்வொருவரும் ரூ.1,200 மதிப்புக்கு மது அருந்திய இவர்கள், அதற்கான பில்லை எடுத்துக் கொண்டு ஊழியர் வந்த போது 4 பேரையும் காணவில்லை. பால்கனி அருகே நின்று கொண்டிருந்த நான்கு பேரும் திடீரென்று வெளியே குதித்தனர்.
இதனால் மது பிரியர்களும், ஊழியர்களும் அதிர்ச்சி அடைந்து கூச்சல் போட்டபடி ஓடி வந்து பார்த்தனர். அந்த நான்கு பேரும் உயரமான இடத்திலிருந்து குதித்து சாதனை நிகழ்த்துபவர்கள்.
எனவே அவர்கள் முன் எச்சரிக்கையாக பாராசூட் ஆடையை அணிந்து வந்திருந்தனர். இதனால் பத்திரமாக தரையில் இறங்கு தப்பினார்கள்.
இந்த சம்பவம் பற்றி மதுபான விடுதி நிர்வாகி கூறுகையில், கண்காணிப்பு கமெரா மூலம் இவர்களை அடையாளம் கண்டுபிடித்து விடுவோம். எனவே பில்லுக்குரிய பணம் எப்படியும் கிடைத்துவிடும் என்கிறார்.
இதை கேள்விப்பட்ட பொலிஸ் அதிகாரிகள் கூறுகையில், இது சாதனை அல்ல. முட்டாள்தனமான செயல் என்று கூறி கில்லாடி ஆசாமிகளை சாடினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக