பணிக்கு திரும்பாவிட்டால் விமான சேவைகள் இயக்குனரகத்தை அணுகி கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்யக் கோரிவிட்டு அதை மூடி விட்டுப் போய் விடுவேன் என்று அந்நிறுவன உரிமையாளர் விஜய் மல்லையா ஊழியர்களை எச்சரித்துள்ளார்.
கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் விமானிகள், பொறியாளர்கள் உள்பட அனைவருக்கும் கடந்த டிசம்பர் மாதம் முதல் சம்பளம் வழங்கப்படாமல் உள்ளது. இதை கண்டித்தும், உடனே சம்பள பாக்கியை வழங்கக் கோரியும் அந்நிறுவன ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று ஊழியர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதிய மல்லையா வரும் 10ம் தேதிக்குள் அனைவருக்கும் சம்பளம் வழங்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
இது தவிர நேற்றிரவு ஊழியர்களுடன் தனது இல்லத்தில் வைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே இன்று பணிக்கு திரும்பாவிட்டால் விமான சேவைகள் இயக்குனரகத்தை அணுகி கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்யக் கோரிவிட்டு அதை மூடுவிடுவேன் என்று ஊழியர்களை எச்சரித்துள்ளார்.
ஆனால் ஊழியர்கள் அவரது எச்சரிக்கையை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்று தெரிகிறது. அவர்கள் யாரும் இன்றும் பணிக்கு வரவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக