திருத்தணி கோயில் குளத்தில் குளித்த வாலிபர் நீரில் மூழ்கி பலியானார். தீயணைப்பு வீரர்களும் கடற்படை வீரர்களும் 2 நாட்களாக தேடி உடலை நேற்று காலை மீட்டனர்.
திருமணம் முடிந்த 2ஆவது நாளில் காதல் கணவரை பறிகொடுத்த இளம்பெண் கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
திண்டிவனத்தை அடுத்த வானூர் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சேகர். இவரது மகள் இளவரசி (22).
அதே பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் மாஸ்டராக வேலை பார்த்த பாபு (28) என்பவரை இளவரசி காதலித்தார்.
பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர். திண்டிவனத்தை அடுத்த மயிலம் முருகன் கோயிலில் 9 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர்.
இந்நிலையில், புதுமண தம்பதியினர் நேற்று திருத்தணி முருகன் கோயிலுக்கு வந்தனர். மலையில் உள்ள படாசெட்டி குளத்தில் பாபு குளித்தார். இளவரசி கரையில் அமர்ந்திருந்தார்.
நீச்சல் அடித்துக் கொண்டிருந்த பாபு, திடீரென நீரில் மூழ்கினார். பதற்றம் அடைந்த இளவரசி, குளத்தை சுற்றிச் சுற்றி வந்து கணவரை தேடினார். கணவரை காணாமல் கதறித் துடித்தார்.
இதையடுத்து அங்கு பக்தர்கள் குவிந்துவிட்டனர். தகவல் கிடைத்ததும் திருத்தணி எஸ்ஐ பழனி மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரித்தனர்.
தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் குளத்தில் இறங்கி விடிய விடிய தேடியும் பாபுவை கண்டுபிடிக்க முடியவில்லை.
அரக்கோணத்தில் இருந்து கடற்படை வீரர்கள் நேற்று காலை வரவழைக்கப்பட்டனர். இவர்கள், குளத்தில் மூழ்கி பாபு உடலை தேடினர். குளத்தில் பாசிபடிந்து காணப்படுவதால் உடலை தேடுவதில் சிரமம் ஏற்பட்டது.
நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு பாசிகளுக்கு இடையே புதைந்திருந்த பாபுவின் உடலை வீரர்கள் மீட்டனர். கணவன் உடலைப் பார்த்து இளவரசி கதறித் துடித்தது அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
இந்த சம்பவத்தால் கோயில் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக