நேற்று முன்தினம் காலை வீட்டின் முன்பாக விளையாடிக் கொண்டிருந்த போது அவ்வழியாக சென்ற டிராக்டர் பவித்ரா மீது மோதியது.
இதில் பவித்ராவுக்கு வயிற்றில் படுகாயம் ஏற்பட்டது. அலறி துடித்த சிறுமியை, கடலூர் தலைமை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பவித்ராவை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஸ்கேன் எடுத்தால் தான் வயிற்று பகுதிக்குள் ஏற்பட்டிருக்கும் காயம் பற்றி தெரியவரும்.
அதன் பின்னரே உரிய சிகிச்சை அளிக்க முடியும் என்று கூறி ஸ்கேன் எடுக்க எழுதி கொடுத்தனர்.
இதற்கிடையில் ‘அம்மா வலிக்குது’ என்று அழுதபடி இருந்த சிறுமியின் உடல்நிலை மோசமடைய தொடங்கியது. பதறிய பெற்றோர் குழந்தையை தோளில் போட்டுக்கொண்டு ஸ்கேன் எடுக்கும் பிரிவுக்கு ஓடினர்.
மின்தடை காரணமாக ஸ்கேன் பிரிவு இயங்கவில்லை. 9 மணிக்கு மேல்தான் மின்சாரம் வரும். அதுவரை பொறுத்திருங்கள் என்று மருத்துவமனை பணியாளர்கள் கூறவே பெற்றோர் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தனர்.
என்ன செய்வது என்று தெரியாமல் குழந்தையை தோளில் போட்டு தவித்தவாறே நீண்ட நேரம் நின்றிருந்தனர்.
இந்நிலையில் குழந்தையின் கண்கள் செருகி இழுப்பு போல வரவே மீண்டும் குழந்தையை அவசர சிகிச்சை பிரிவுக்கு தூக்கிச்சென்றனர்.
அதற்குள் குழந்தை பரிதாபமாக இறந்தது. இதனால் ஆவேசமடைந்த சிறுமியின் உறவினர்கள் சடலத்துடன் மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
குழந்தை இறந்ததற்கு மருத்துவமனை நிர்வாகம் உரிய பதில் கூற வேண்டும் என அவர்கள் கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக