ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

துபாயில் பயணிகள் வருகை அதிகரிப்பு E.gate அறிமுகம்!


துபாய் விமான நிலையத்தில் குடியுரிமை பரிசோதனைகளுக்காக நீண்ட நேரம் பயணிகள் காத்துக் கிடப்பதைத் தவிர்க்கும் வகையில் 'இ-கேட்' என்ற புதிய வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.



இதன் மூலம் பயணிகள் மொத்தம் 14 வினாடிகளில் தங்கள் பாஸ்போர்ட் உள்ளிட்ட பரிசோதனைகளை முடித்துக் கொள்ள முடியும்.துபாய் சர்வதேச விமான நிலையத்தில் தற்போது ஏ 380 ரக பெரிய விமானங்கள் வந்து நிற்பதற்கான பன்னாட்டு முனையம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது.



இதன் கட்டுமானம் முடிந்த பின் துபாய்க்கு வருகை தரும் வெளிநாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை ஒன்பது கோடியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் விமான நிலையத்தில் பயணிகளிடம் மேற்கொள்ளப்படும் குடியுரிமை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளை விரைவில் மேற்கொள்ள 'இ-கேட்' என்ற திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.



இந்த நுழைவாயிலில் 'பாஸ்போர்ட்' டை பரிசோதிக்கும் ஸ்கேனர் பயணியைச் சோதிக்கும் ஒரு கேமரா பயணியின் கண் கருவிழியைச் சோதிக்கும் ஸ்கேனர் உள்ளிட்ட கருவிகள் இருக்கும்.



இவற்றின் மூலம் ஒட்டுமொத்த பரிசோதனையும் 14 வினாடிகளில் முடிந்து விடும். இதன் மூலம் பயணிகள் விமான நிலையத்தில் குவிவதை குறைக்க முடியும். இத்திட்டம் ஏற்கனவே அபுதாபியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக