ஜார்க்கண்ட் மாநிலத்தில் புந்து அருகே இரும்புக் கம்பிகளை ஏற்றிச் சென்றுகொண்டிருந்த லாரி ஒன்றுடன் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 20 பேர் உயிரிழந்தனர். |
ஜாம்ஷெட்பூரில் இருந்து பீகாரில் ஆராகுக்கு அந்த பேருந்து சென்றுகொண்டிருந்தபோது இன்று அதிகாலை 3.30 மணியளவில் லாரியுடன் மோதியதில் நிகழ்விடத்திலேயே 13 பேர் உயிரிழந்தனர்.
7 பேர் மருத்துவமனையில் உயிரிழந்தனர். இந்த விபத்தில் 25 பேர் காயமடைந்தனர். அவர்களில் 14 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக