ஸ்ரீநகர்: நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள அப்சல் குருவுக்கு தண்டனையை ரத்து செய்து கருணை காட்ட வேண்டும் என்று கோரி நாளை ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு கருணை காட்டி தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற வேண்டும் என்று கோரி தமிழகத்தில் மக்கள் போராட்டம் வெடித்தது. பல்வேறு தமிழ் ஆர்வலர்கள், அமைப்புகள், கட்சிகள் தீவிரப் போராட்டத்தில் குதித்தன. உச்சகட்டமாக காஞ்சிபுரத்தில் செங்கொடி என்ற பெண் தீக்குளித்து உயிர் நீத்தார்.
இதையடுத்து மூன்று பேரின் தூக்குத் தண்டனையைக் குறைத்து கருணை காட்ட வேண்டும் என்று கோரி தமிழக சட்டசபையி்ல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக