இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு இந்தத் தகவலை அனுப்பி வைத்துள்ளது. 2009 ஜனவரி 20ம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 06ம் திகதி வரையில் 4164 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக முன்னாள் அமெரிக்கத் தூதுவர் ரொபர்ட் ஒ பிளக் ராஜாங்கத் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளார்.
இந்தக் காலப்பகுதியில் 10000ற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். எவ்வாறெனினும் நம்பகமான தரவு மூலங்களின் ஊடாக கிடைக்கப் பெற்ற பொதுமக்கள் இழப்பு குறித்த தகவல்களை ஐக்கிய நாடுகள் அமைப்பு பகிர்ந்துகொள்ளவில்லை என விக்கிலீக்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது.
ஜனவரி மாதத்தில் நாளொன்றுக்கு சராசரியாக 33 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், பெப்ரவரி மார்ச் மாதங்களில் இந்த எண்ணிக்கை 63 வரையில் உயர்வடைந்ததாகவும் அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது. ஜனவரி மாததில் நாள் ஒன்றுக்கு சாசரியாக காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 184 எனவும், பெப்ரவரியில் இந்த எண்ணிக்கை 145ஆகவும், மார்ச்சில் அந்த எண்ணிக்கை 115 ஆகவும் காணப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக