ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

27-ம் தேதியிலிருந்து "மன்னை எக்ஸ்பிரஸ்' ரயில்


                           
மன்னார்குடி - சென்னை ( எழும்பூர்) இடையேயான மன்னை எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்தை வரும் 27-ம் தேதி மத்திய அமைச்சர் தினேஷ் திரிவேதி கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார்.

மன்னார்குடி ரயில் நிலையத்தில் அன்றைய தினம் மாலை 4 மணிக்கு விழா நடைபெறுகிறது. ரயில்வே துறை இணையமைச்சர் முனியப்பா, தி.மு.க. மக்களவைத் தலைவரும் ரயில்வே நிலைக்குழுத் தலைவருமான டி.ஆர். பாலு, மத்திய நிதித்துறை இணையமைச்சர் பழனிமாணிக்கம் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி-சென்னைக்கு இடையே அகல ரயில் பாதை அமைக்கும் பணி கடந்த ஒன்றரை ஆண்டாக நடைபெற்று வந்தது. இந்தப் பணி நிறைவடைந்ததை அடுத்து இந்த ரயில் சேவை தொடங்கப்படுகிறது.
இந்த ரயில் தினந்தோறும் மன்னார்குடியில் இருந்து இரவு 9.20 மணிக்குப் புறப்பட்டு சென்னை எழும்பூருக்கு காலை 5.55 மணிக்கு வந்தடையும். அதேபோல் எழும்பூரில் இருந்து இரவு 9.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில் மன்னார்குடியில் காலை 6.20 மணிக்குச் சென்றடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக