ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

கூடங்குளம் மக்களிடம் ஜெயலலிதா பேசவேண்டும்: மேதா பட்கர்


கூடங்குளம் அணுமின் நிலையம் கூடாது என்று போராடும் மக்களிடம் முதல்வர் ஜெயலலிதா பேச முன்வர வேண்டும் என்று சமூக ஆர்வலர் மேதா பட்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பாதிக்கப்பட்ட மக்களை திங்கள்கிழமை (செப்.19) சந்திக்கிறார் மேதா பட்கர்.
"தினமணி' செய்தியாளருக்கு மேதா பட்கர் அளித்த பேட்டி விவரம்:
ஜப்பான், பிரான்ஸ் போன்ற வளர்ந்த நாடுகள் புதிய அணுமின் நிலையங்களைத் தொடங்குவதை நிறுத்தியுள்ளனர். இதற்கு அந்த நாடுகள் அணுமின் நிலையங்களினால் சந்தித்த பேரழிவுகள்தான் காரணம்.
இது போன்ற பேரழிவுகளின் மூலம் இந்திய அரசு பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். இது ú பான்ற திட்டங்கள் தொடங்குவதற்கு முன்பு அப்பகுதி மக்களிடம் பேச்சு நடத்த வேண்டும். போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் கைது செய்யப்படுகிறார்கள். இது கண்டிக்கத்தக்கது. அணு சக்தியினால் உலகமே பெரும் ஆபத்தைச் சந்திக்க உள்ளது. இதை மத்திய அரசு உணர்ந்து கொள்ள வேண்டும். இந்த மக்களைச் சந்திக்க திங்கள்கிழமை திருநெல்வேலி செல்கிறேன். அவர்களுக்கு ஆதரவாக நானும் போராட்டத்தில் ஈடுபட உள்ளேன். நீண்ட நாள்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அப்பகுதி மக்களை அழைத்து ஜெயலலிதா பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்.
இந்த திட்டத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளைப் பெற மத்திய அரசிடம் பேச்சு நடத்த
ஜெயலலிதா முன்வர வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார் மேதா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக