இளம்பெண்ணுக்கு செல்போனில் ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பிய விவகாரத்தில் அக்டோபர் 22ம் தேதி கேரள அமைச்சர் பி.ஜே. ஜோசப்பை நேரில் ஆஜராகும்படி தொடுபுழா நீதிமன்றம் அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் உள்ள தொடுபுழா பகுதியை சேர்ந்தவர் ஜெய்மோன். இவருடைய மனைவி சுரபி. இவருடைய செல்போனுக்கு கேரள நீர்பாசன துறை அமைச்சர் பி.ஜே ஜோசப்பின் செல்போனில் இருந்து ஆபாச எஸ்எம்எஸ்கள் வந்ததாக கூறப்பட்டது.
இது தொடர்பாக தொடுபுழா குற்றவியல் முதல் வகுப்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சுரபி புகார் செய்தார். இதையடுத்து, பி.ஜி ஜோசப் மீது வழக்குப் பதிவு செய்துள்ள நீதிமன்றம், விசாரணைக்கு அக்டோபர் 22ம் தேதி நேரில் ஆஜராகும்படி ஜோசப்புக்கு உத்தர விட்டுள்ளது.
கடந்த இடது முன்னணி அரசிலும் ஜோசப் அமைச்சராக இருந்தார். அப்போது, விமானத்தில் லட்சுமி கோபகுமார் என்ற நடிகையிடம் சில்மிஷம் செய்ததாக புகார் கூறப்பட்டதால் பதவியை ராஜினாமா செய்தார்.
தற்போது மீண்டும் இளம்பெண்ணுக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பிய விவகாரத்தில் சிக்கி உள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக