இலவசப் பொருள்கள் விநியோகத்துக்காக உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதியை அறிவிப்பதில் மாநில தேர்தல் ஆணையம் தாமதம் செய்து வருவதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
உள்ளாட்சி அமைப்புகளில் மகளிர் மற்றும் தனித் தொகுதிகளுக்கான இடங்கள் அறிவிக்கப்படுவதற்கு முன்பே அதிமுக வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது. அனைவருக்கும் பொதுவாக அறிவிக்க வேண்டியதை ஆளும்கட்சிக்கு மட்டும் தனியாகத் தெரிவித்திருக்கிறது போலும். இதற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்தவுடன் அவசர அவசரமாக தனித் தொகுதிக்கான இட ஒதுக்கீடு பட்டியல் அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.
இலவசப் பொருள்கள் விநியோகம், ஆசிரியர் இடமாறுதலுக்கான கவுன்சலிங் ஆகியவற்றை முடித்துவிட்டு தேர்தல் தேதியை அறிவிக்கலாம் என்ற மேலிடத்தின் உத்தரவை நிறைவேற்றுவதற்காக உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பில் தாமதம் செய்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.
2008-ல் அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி 7 ஆண்டு தண்டனை முடித்த ஆயுள் தண்டனை கைதிகளும், 60 வயதுக்குட்பட்ட 5 ஆண்டு தண்டனை அனுபவித்தவர்களும் விடுதலை செய்யப்பட்டனர்.
அந்த அடிப்படையில் இந்த ஆண்டு 400-க்கும் அதிகமான கைதிகள், தாங்கள் விடுதலையாவோம் என எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்திருப்பாதாக செய்திகள் வந்துள்ளது. வெளியில் இருப்பவர்களை உள்ளே அனுப்பும் அதிமுக அரசு, உள்ளே இருப்பவர்களை எங்கே விடுவிக்கப் போகிறார்கள்?
பொன்முடி, வீரபாண்டி ஆறுமுகம், கே.என். நேரு ஆகியோர் ஒரு வழக்கில் ஜாமீன் பெறும் நேரத்தில் இன்னொரு வழக்கில் கைது செய்து சிறையிலேயே வைத்திருக்கிறார்கள். இது ஜெயலலிதாவின் பழிவாங்கும் செயல் என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.
குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் பதவி ஏற்பு விழாவில் ஜெயலலிதாவும், ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவில் நரேந்திர மோடியும் கலந்து கொண்டனர். ஆனாலும் அதிமுக கூட்டணியில்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இருக்கிறது. இந்நிலையில் மோடியின் உண்ணாவிரதத்தை சீதாராம் யெச்சூரி கண்டிப்பது ஆச்சரியமாக உள்ளது என்று கருணாநிதி கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக