ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

அன்னா ஹசாரேவின் நிபந்தனைகளை ஏற்றது அரசு : நாளை பார்லிமென்டில் விவாதம்


புதுடில்லி: வலுவான ‌ஜன் லோக்பால் மசோதா அமல்படுத்த வேண்டி உண்ணாவிரதம் இருந்து வரும் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே மற்றும் அவரது குழுவினருக்கு முதல் வெற்றி கிடைத்துள்ளது. ஹசாரே விதித்துள்ள 3 நிபந்தனைகளை ஏற்பதாக அரசு தெரிவித்துள்ளது.


இதுதொடர்பாக, தலைநகர் டில்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்த பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் பன்சால் கூறியதாவது, ஹசாரேவின் நிபந்தனைகளை அரசு ஏற்றுள்ளது. இதனையடுத்து, நாளை பார்லிமென்டில், ஜன் ‌லோக்பால் மசோதா குறித்த விவாதம் நடைபெற உள்ளது. இந்த மசோதா, விதி 193 கீழ் விவாதம் நடத்தப்பட இருப்பதாக அவர் தெரிவி்ததார்.

சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவின் 3 நிபந்தனைகள் :


1. மாநிலங்களில் லோக் ஆயுக்தா ஏற்படுத்துவது குறித்து பார்லிமென்டில் விவாதிக்க வேண்டும்.


2. ஜன்லோக்பால் மசோதாவை பார்லிமென்டில் தாக்கல் செய்து இதன் மீது விவாதத்தைத் தொடங்க வேண்டும்.


3. கீழ்மட்ட அரசு ஊழியர்கள் உட்பட அனைத்து அரசு ஊழியர்களையும் அதிகாரிகளையும் லோக்பால் சட்ட வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும்.


இந்த 3 நிபந்னைகளையும் அரசு ஏற்கும் பட்சத்தில் உண்ணாவிரதப்போராட்டம் முடிவுக்கு வரும் என்று அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார். இந்த 3 நிபந்தனைகளை வலியுறுத்தி பிரதமருக்கு அன்னா ஹசாரே கடிதம் எழுதியுள்ளார்.


இத்ற்கிடையில், இன்று மாலையில் பிரதமர் இல்லம் முன்பாக திரள அழைப்பு விடுக்கப்பட்டதை அடுத்து பிரதமர் இல்லத்தை சுற்றிலும் உள்ள மெட்ரோ ரயில்வே ஸ்டேஷன்கள் மூடப்பட்டுள்ளன. போலீசாரும் ரேஸ்கோர்சில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


நி‌றைவேறும் வரை தான் சாக மாட்டேன் : இன்றைய உண்ணாவிரத பந்தலில் ஹசாரே பேசும் போது : தான் உடல் நலத்துடன் இருப்பதாகவும், மசோதா நிறைவேறும் வரை தனது போராட்டம் ஓயாது என்றும் லோக்பால் நி‌றைவேறும் வரை தான் சாக மாட்டேன் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாகவும் குறிப்பிட்டார். தொடர்ந்து பாராத் மாதாக்கி, வந்தே மாதரம் , என உரத்த குரலில் அவர் சில நிமிடம் பேசி விட்டு மீண்டும் மேடையில் அமர்ந்து கொண்டார். இதற்கிடையில் இவரது போராட்டத்தை கைவிடுமாறு பிரதமர், சபாநாயகர் கோரிக்கை விடுத்துள்ளனர். முடிவுக்கு கொண்டு வருவதில் அரசு முழு அக்கறையுடன் இருக்கிறது என சட்டத்துறை அமைச்சர் சல்மான்குர்ஷித் கூறினார்.


பிரதமர் வீடு முன்பு கெரோ : ஹசாரே குழுவினரும் பேச்சுவார்த்தைக்கு அரசு அழைத்தால் தயார், ஆனால் யாரிடம், எங்கே என இதுவரை முறையான அறிவிப்பு எதுவும் இல்லை என குறைப்பட்டுள்ளனர். இதற்கிடையில் இன்று பிரதமர் மன்மோகன்சிங் லோக்சபாவில் ஹசாரே போராட்டம், மற்றும் ஊழல் விவகாரம் குறித்து அரசு எடுக்கும் நடவடிக்கை உள்ளிட்ட விவர அறிக்கையை அளித்தார். ஓய்வு பெற்ற முன்னாள் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஜே.எஸ்., வர்மா , ஹசாரேயுடன் பேச்சு நடத்த கடிதம் மூலம் பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார். இன்று மாலை நாட்டு மக்கள் அனைவரும் பிரதமர் ( 7 ஆர். சி. ஆர். ) இல்லத்தின் முன்பு திரள ( டில்லி சாலோ ) ஹசாரே குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர். இதனால் மேலும் பிரச்னை விஸ்வரூபம் எடுப்பதை அரசு விரும்பவில்லை என்பதால் சமரச முயற்சியில் அரசு இறங்கியுள்ளது. இதற்கிடையில் பிரதமர் இல்லம் நோக்கி வந்த நூற்றுக்கணக்கானோர் போலீசாரால் அப்புறப்படுத்தப்பட்டு பஸ்சில் ஏற்றி அழைத்து சென்றனர்.


ஹசாரவுக்கு சல்யூட் அடிக்கும் பிரதமர் : இன்று லோக்சபாவில் பேசிய பிரதமர், நாட்டில் ஊழல் பெரும் பிரச்னையாக உள்ளது. இதனை சரி செய்ய எனது தலைமையிலான அரசு முழு முயற்சி எடுத்து வருகிறது .ஊழல், லஞ்சம் ‌பன்முக பிரச்னைகள‌ை கொண்டதாக இருக்கிறது. இதனை ஒழிக்க போதிய நடவடிக்கை எடுத்து வருகிறோம். கோர்ட் மற்றும் பார்லி., பொதுக்கணக்கு குழு முன்பு உள்ள விஷயங்களை நான் பேச விரும்பவில்லை. லோக்பால் மசோதா நிறைவேற்றுவ‌தில் அன்னா ஹசாரே பரிந்துரைத்துள்ள வரைவு மசோதா பார்லி., நிலைக்குழு முன்பு இருக்கிறது. மேலும் அவரது கருத்துக்கள் பார்லியி.,ல் எழுப்பட்டும். ஹசாரேயை நான் ‌பாராட்டுகிறேன். அவருக்கு மரியாதை அளிக்கிறேன். இவர் தனது போராட்டத்தை கைவிட வேண்டும் . என்மீது கூறப்படும் புகார்கள் எதுவும் உண்மையல்ல. எதிர்கட்சிகள் திட்டமிட்டு தனிப்பட்ட தாக்குதலை நடத்துகிறது. குற்றம் இருந்தால் நிரூபிக்கட்டும். முரளிமனோகர் ஜோஷி என் மீது தனிப்பட்ட விமர்சனம் செய்கிறார். இவ்வாறு பிரதமர் பேசினார்.


சபாநாயகர் ஹசாரேவுக்கு கோரிக்கை: பிரதமர் பேசி முடித்ததும், சபநாயகர் மீராகுமார் ஹச‌ோர தனது உண்ணாவிரத போராட்டத்தை கைவிட வேண்டும். என எம்.பி.,க்கள் வாயிலாக கேட்டுக்கொள்வதாக கூறினார்.


"லோக்பால் மசோதா, நான்கு நாட்களில் வேண்டும் என, ஹசாரே விதித்த நிபந்தனையால், மத்திய அரசு, நேற்று அதிக வேகம் காட்டியது. காலை முதல், மாலை வரை, பல அதிரடி திருப்பங்கள் ஏற்பட்டன. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், ஹசாரே தன் உண்ணாவிரதத்தை கைவிட வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஜன்லோக்பால் மசோதா, பார்லிமென்ட் நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஊழல்வாதிகளை தண்டிக்க வகை செய்யும் பலமான லோக்பால் மசோதாவை, பார்லிமென்டில் தாக்கல் செய்ய வலியுறுத்தி, காந்தியவாதி அன்னா ஹசாரே, கடந்த ஒன்பது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். நேற்று முன்தினத்திலிருந்து, இந்த விவகாரத்தில்அதிரடியான திருப்பங்கள் ஏற்பட்டன. மத்திய அரசு, தன் நிலையில் இருந்து இறங்கி வந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு, அரசு தரப்பு பிரதிநிதியான பிரணாப் முகர்ஜியுடன், ஹசாரே குழுவினர் சந்தித்து பேசினர். இச்சந்திப்பை தொடர்ந்து, அரசு தரப்பில், பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. நேற்று காலை, ஹசாரே குழுவினருடன், இரண்டாவது சுற்றுப்பேச்சுவார்த்தை நடந்தது. சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் இல்லத்தில் நடந்த சந்திப்பில், ஹசாரே தரப்பில் கெஜ்ரிவால், பிரசாந்த் பூஷண், கிரண் பேடி பங்கேற்றனர்.

இச்சந்திப்பின் போது, ஹசாரே குழு வைத்த கோரிக்கைகளில் ஒரு சிலவற்றை ஏற்றுக்கொள்ள முன்வந்ததாக தெரிகிறது. இருப்பினும், கீழ்மட்ட அதிகாரிகளையும் லோக்பால் வரம்புக்குள் சேர்ப்பது, லோக்பால் மூலம், மாநிலத்தில் லோக் ஆயுக்தா அமைப்பது உட்பட, மூன்று முக்கிய விஷயங்களில் இரு தரப்புக்கும் இடையே உடன்பாடு ஏற்படவில்லை.
கூட்டம் முடிந்ததும், நிருபர்களிடம் பேசிய சல்மான் குர்ஷித், ""லோக்பால் மசோதா தாக்கலாவதற்கு, இன்னும், 20 நாட்களுக்கு மேலாகும். இருப்பினும், இப்போதைக்கு உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டு வருவது முக்கியமானது' என்றார்.

இதைத் தொடர்ந்து, மாலையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மற்றொரு திருப்பம் ஏற்பட்டது. இதில் பேசிய பிரதமர், ""அரசு தரப்பு மசோதாவையும், ஜன்லோக்பால் மசோதாவையும், பார்லி நிலைக்குழு விரைந்து பரிசீலிக்க கேட்டுக்கொள்வேன். லோக்பால் வரம்பிற்குள் என்னையும் (பிரதமர்) சேர்ப்பதற்கு சம்மதித்தேன். ஆனால், சக அமைச்சர்கள் தான் அதை ஏற்கவில்லை. ஹசாரே குழு தெரிவித்த கோரிக்கைகளை ஏற்றுள்ளோம். இருப்பினும், முழுமையாக ஏற்றுக்கொண்டோம் என்ற அர்த்தமாகாது'' என்றார். அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், ""ஜன்லோக்பால் மசோதா, நாளையே(இன்று) பார்லிமென்டில் தாக்கலனால், ஹசாரே உண்ணாவிரதத்தை கைவிட்டு விடுவார்'' என்றார்.

இறங்குகிறது அரசு: ஹசாரே உண்ணாவிரதத்தை கைவிட செய்யும் முயற்சியாக, மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி, நேற்று இரவு, ஹசாரே குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். தற்போது, ஹசாரே நிபந்தனைகளுடன் உடனடியாக லோக்பால் மசோதா உருவாக்க கால அவகாசம் தேவை என்ற கருத்து அரசிடம் உள்ளது. அதே சமயம், ஹசாரே உண்ணாவிரதம் முடிவுற்று சுமுக நிலை ஏற்பட்டால் தான், அரசு மீதான மக்கள் கோபம் குறையும் என்ற கருத்து மத்திய அரசிடம் ஏற்பட்டிருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக